'ராகிங் மற்றும் பாலியல் கொடுமை உட்பட, கல்லுாரி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தடுக்க, ஐந்து வகையான கமிட்டிகளை கட்டாயம் அமைக்க வேண்டும்' என, இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நிபந்தனை விதித்துள்ளது. ஏ.ஐ.சி.டி.இ.,யின் கட்டுப்பாட்டில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகள், ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கு அங்கீகாரம் பெற, பிப்., 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டு உள்ளது.
அத்துடன், சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதில், மிக முக்கியமாக ஐந்து வகையான கமிட்டிகளை நியமிக்க உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், அரசோ, பல்கலையோ அனுமதிக்காத கட்டணத்தை, மறைமுகமாக வசூலிக்கக் கூடாது; வசூலித்தால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ஐந்து வகை கமிட்டி என்னென்ன?
* மாணவர்களுக்கான மனநல வழிகாட்டி கமிட்டி
* 'ராகிங்' தடுப்பு மற்றும் புகார் விசாரணை கமிட்டி
* குறைதீர் கமிட்டி
* மாணவியர் மற்றும் பெண் ஊழியர்களுக்கான பாலியல் கொடுமை தடுப்பு விசாரணை கமிட்டி
* தலித் மாணவர்களுக்கான தீண்டாமை தடுப்பு கமிட்டி.
No comments:
Post a Comment