வரும் ஜனவரி 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜேக்டோ அறிவித்துள்ளது. கோவை தாமஸ் கிளப்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஜேக்டோ மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை, ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்புக்கென தனிச் சட்டம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் சிவானந்தா காலனியில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
முன்னதாக, மறியல் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்கும் வகையில் ஜனவரி 27 முதல் 29-ஆம் தேதி வரை ஆசிரியர் சந்திப்பு இயக்க சுற்றுப்பயணம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் த.அருளானந்தம், சு.கணேஷ்குமார், ந.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment