வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது, முகவரி மாற்றம், எப்படி வாக்களிப்பது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அடங்கிய வாக்காளர் கையேட்டை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. புதிய வாக்காளர்களுக்கு இந்த கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது.
கையேட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:
* தேர்தலுக்கு முன், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி இணைய தளத்தில் சரி பார்க்கவும்
* ஓட்டு போட, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் போதாது; உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும்.
* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, ஓட்டு போடுவது தொடர்பான தகவல்களுக்கு, '1950' கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்
* ஒரு நபர், ஓரிடத்தில் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும்
* பணம், மது மற்றும் பிற பொருட்களை வாக்காளர்களுக்கு வினியோகிப்பது குற்றம்; வழங்குபவர் மற்றும் பெறுபவருக்கு, சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு, பல தகவல்கள், கையேட்டில் இடம் பெற்றுள்ளன.
தேசிய வாக்காளர் தினம்
தேசிய வாக்காளர் தின விழா, சென்னை ராஜ்பவனில் நேற்று நடந்தது. விழாவில், புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, கவர்னர் ரோசய்யா பேசியதாவது:
தேர்தலை சுதந்திரமாக, வெளிப்படையாக நடத்த, பல்வேறு சவால்களை, தேர்தல் கமிஷன் சந்திக்க வேண்டி உள்ளது. அடியாள் பலம், பண பலம் போன்றவற்றை சமாளிக்க வேண்டி உள்ளது. சிறந்த அரசு அமைய, தேர்தல் முக்கிய கருவியாக உள்ளது. இம்முறை, 16.18 லட்சம் வாக்காளர்கள், புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 6.24 லட்சம் பேர் இளையோர். இவர்கள் ஓட்டளிப்பதுடன், மற்றவர்களும் ஓட்டளிக்க உதவுவர் என்ற நம்பிக்கை எனக்கு
உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேசுகையில், ''கணக்கெடுப்பின்போது, 20 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது தெரியவந்தது. அவர்களை சேர்க்க, படிவம் கொடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment