Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 31, 2016

    தந்தி டிவி விவாதம் சரியா? ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் முருகனின் குற்றச்சாட்டு முறையா??????

    ஜாக்டோ போராட்டம் பற்றி நேற்று தந்தி டிவியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பல அர்த்தமற்ற கருத்துக்களை கூறிச் சென்றுள்ளார் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி திரு.முருகன் அவர்கள். அவருக்கு சில கேள்விகளும் அவரது கருத்துகளுக்கு சில பதில்களும் இங்கே....

     ஐயா முருகன் அவர்களே
    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கேட்காதீர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று கேளுங்கள் என்கிறீர்களே உங்களுக்கு கோரிக்கைகள் என்ன தெரியாமல் பொதுவிவாத நிகழ்ச்சிக்கு வந்துள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்தி சென்றுள்ளீர்கள் காரணம் நீங்கள் கூறுவது போல மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் எல்லோருக்கும் கேட்கவில்லை மாறாக விட்டுப் போன ஏற்கனவே பெற்றுவந்த ஊதியத்தை மட்டுமே கேட்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
         மத்திய அரசுப் பள்ளிகளுக்கு இணையான தரம் நமது மாநில அரசுப் பள்ளிகளில் இல்லை என்கிறீர்களே தமிழக அரசே ஒத்துக் கொண்டுள்ளது தரம் உயர்ந்துள்ளது என்பதை.மேலும் ஐஐடி போன்ற நிறுவனங்களில் நமது மாணவர்கள் கணிசமாக வருவதில்லை என்றீர்களே அதற்குக் காரணம் அரசின் கல்விக் கொள்கையா அல்லது ஆசிரியர்களா என்பது பற்றி பொது விவாதம் நடத்திட நீங்களே சமூக ஆர்வலராய் இருந்து முன் வராததன் மர்மம் என்ன???
           ஆசிரியர்கள் முன்பு போல சமூகப் பணியாக ஆசிரியப் பணியைச் செய்யவில்லை என்கிறீர்களே களம் வந்து பாருங்கள் எவ்வளவோ பணிகளோடும் எவ்வளவோ நெருக்குதல்களோடும் தான் இன்று  அறப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
           ஆசிரியர்கள் தமது தொழிலை சேவையாக மட்டுமே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களே எங்களது குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள்?  எந்தக் கடையிலும் இவர் சமூகப் பணி செய்கிறார் குறைத்துக் கொடுங்கள் என்று கூறுவதில்லை மாறாக விலையை உயர்த்திக் கொடுக்கிறாரகள் தெரியுமா உங்களுக்கு? தெரியாது உங்களுக்கு காரணம் இந்தளவு யோசிப்பதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது.
           நீங்கள் உங்கள் பணிக்காலத்தில் வாங்கிய் அரசுச் சலுகைகளை மறந்துவிட்டுப் பேசுகிறீர்களோ என்ற சந்தேகம் எழுவதைத் தடுக்க முடியவில்லை காரணம் நீங்கள் பார்ததும் சமூகப் பணிதானே முறையான ஊதியம் வாங்காமலா இருந்துருப்பீர்கள்? இன்றளவும் ஓய்வூதியம் வாங்காமலா இருக்கிறீர்கள்? மனச்சாட்சியோடு பேசுங்கள் எங்களிடம் பிடித்த பணம் இதுவரை எங்குள்ளது என்றே தெரியாமல் பலர் இறந்தே போய்விட்டனர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என்ன சொல்லப் போகிறீர்கள்?
            அரசியல் ஆக்குகிறோம் என்கிறீர்களே அரசியல் ஆக்கியது யார் உங்களைப் போன்ற சில அதிகாரிகள் தானே!! இவ்வளவு நாளாக இருந்து விட்டு தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தலா? என்கிறீர்களே! இதிலிருந்து ஒன்று தெரிகிறது நீங்கள் எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே விவாதத்தில் கலந்து கொண்டுள்ளீர்கள் என்பது புரிகிறது.
            நாங்கள் 6வது ஊதியக் குழு நடைமுறைப்படுத்தியது முதல் போராடுகிறோம் என்பது தமிழக நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பவரைப் போல விவாதங்களுக்கு வரும் உங்களுக்கு தெரியாமல் போனது எப்படி?ஆச்சர்யமே..!!!
            தேர்தல் நேரத்தில் போராடினால் அச்சுறுத்தல் என்கிறீர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போராடினால் அதற்குள்ளுமா? என்கிறீர்கள் உங்களுடைய நோக்கமெல்லாம் ஏதோ ஒரு வகையில் குறை கூற வேண்டும் என்பது மட்டுமே.
          கடந்த தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்த பழைய பென்சன் திட்டம் என்ன ஆனது என்று கேட்டால்அரசியல் என்கிறீர்களே உங்களைப் போன்ற சில அறிவுஜீவிகளிடமும் சமூக சேவகர்களிடமும் ஒரு வேண்டுகோள் அரசு செய்வது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா? போராடாமல் எங்களின் நியாயமான கோரிக்கைகளை எப்படிப் பெறுவது என்ற மாற்றுத் திட்டத்தைக் கொடுத்தால் அதன்படி நடக்க நாங்கள் தயார். செய்வீர்களா அதெல்லாம் செய்ய மாட்டீர்கள் அப்படிச் செய்தால் உங்களை சில தொலைக்காட்சி நிறுவனங்கள் சமூக ஆர்வலர் என்ற பட்டம் வழங்காது.
           ஐயா முருகன் அவர்களே நீங்கள் வாங்கும் பென்சன் அளவு கூட நாங்கள் ஊதியம் வாங்கவில்லை என்ற உண்மை எப்படி அந்நிகழ்ச்சியைப் பார்த்த அனைவருக்கும் தெரியாது.
            போராட்டம் என்பது எந்த நாட்டில் இல்லை எந்த மாநிலத்தில் இல்லை எந்த் துறையில் இல்லை அப்படி இல்லை என்றால் அந்நாடு நம் நாட்டைப் போன்ற ஜனநாயக நாடே இல்லை என்பதை பணிவுடன் தெரிவிக்கிறோம்.

    No comments: