உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில், வாசித்தலே எல்லை என்ற தலைப்பின் கீழ், அறிவிக்கப்பட்ட போட்டிக்கான ஆய்வு, நேற்று துவங்கியது. அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், வாசித்தலே எல்லை என்ற தலைப்பில், இப்போட்டி தமிழக கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில், துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளிலுள்ள, 4 முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் வாசிப்பு திறன் அளவிடப்படுகிறது.
4, 5ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் ஆய்வு செய்யப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் பள்ளிக்கு, ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்படும் என, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டது. இதன் அடிப்படையில் உடுமலையில், 10, குடிமங்கலத்தில், 9 மடத்துக்குளத்தில், 7 பள்ளிகள், இப்போட்டிக்கு விண்ணப்பித்துள்ளன.
நேற்று இப்பள்ளிகளில் ஆய்வு நடந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு பகுதியிலுள்ள பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர் ஆய்வு நடத்தினர். இதில் தேர்வு செய்யப்படும் மூன்று பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, சிறந்த பள்ளியை தேர்வு செய்கின்றனர்.
No comments:
Post a Comment