வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 42,748 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வை 52,353 பேரும் எழுதவுள்ளனர். மாநிலம் முழுவதிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரையும் நடைபெறுமென கல்வித் துறை அட்டவணை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வை வேலூர் கல்வி மாவட்டத்தில் 21,610 மாணவ, மாணவிகளும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 21,138 பேரும் என மாவட்டம் முழுவதிலும் 42,748 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதிலும் 145 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை வேலூர் கல்வி மாவட்டத்தில் 27,357 பேரும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 24,996 என 52,353 மாணவ, மாணவிகளும் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள 204 மையங்களில் எழுத இருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment