பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் விவரத்தை சேகரித்து அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு, 2015-16ம் கல்வியாண்டில் அரசு பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் விவரத்தை சேகரித்து அனுப்ப, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி கூறுகையில், 'பிப்., அல்லது மார்ச் மாதத்தில், சட்டசபை பட்ஜெட் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதால், சத்துணவு திட்டத்தில் மானியம் மற்றும் சத்துணவு சமையல் பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஊழியர் எண்ணிக்கை அடிப்படையில் இவ்விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. 'மாவட்டம் தோறும் பள்ளிகள் வாரியாக, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை விவரம் சேகரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது' என்றார்.
No comments:
Post a Comment