பகுதிநேர பணியிடத்தை குறைக்கும் நடவடிக்கையில், கல்வித்துறை இறங்கியுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், இசை, தையல், தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுத்தர, 16 ஆயிரத்து, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், 2012ல் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் இருந்து, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை திரும்ப பெறும் பணியை கல்வித்துறை துவக்கியுள்ளது.
தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''கிராமப்புற தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும் நிலையில், 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசு பள்ளியில் இருந்து, ஆசிரியரை திரும்பப் பெற துவங்கியுள்ளனர். இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment