15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் வேலூரில் மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாவட்ட ஜாக்டோ தொடர்பாளர் பி.தாண்டவராயன் தலைமை வகித்தார்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் அ.சுதாகரன் வரவேற்றார்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது, அகவிலைப்படி 50 சதவிகிதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்கி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வது என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் பங்கேற்ற 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 31), திங்கள்கிழமை (பிப்.1) ஆகிய இரு நாள்களுக்கு மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment