இந்திய மருத்துவ துறையில், அரசு உதவி மருத்துவ அதிகாரி பணியிடத்துக்கான மதிப்பெண் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. இதில், பெண் டாக்டர்கள் அதிகளவில் தேர்வாகி உள்ளனர்.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ துறையில் காலியாக உள்ள, 83 உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, கடந்த ஆண்டு, மே 31ம் தேதி நடந்தது; 3,200 பேர் பங்கேற்றனர். இவர்களில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், நேர்காணல் நடத்தப்பட்டது.இதையடுத்து, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை, தரம் வாரியாக, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், 80 சதவீதம் பெண்களே இடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment