போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக, இரண்டு நாட்கள் ஆசிரியர் சந்திப்பு இயக்கம் நடத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜாக்டோ அமைப்பின் மேட்டூர் வட்ட கிளை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தொடர்பாளர் பாரி தலைமை வகித்தார். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்பட, 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஜன. 30, 31, பிப்.1 ஆகிய மூன்று நாட்களும் சேலம் நாட்டாண்மை கழகம் முன்பு நடத்தும் போராட்டத்தில் மேட்டூர் வட்ட ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.
இதற்காக, இன்றும், நாளையும் ஆசிரியர் சந்திப்பு இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் ஜாக்டோ நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment