'வயது முதிர்வு மற்றும் நோய்வாய்பட்டவர்களுக்கு, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'ஜாக்டா' சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:
வயது முதிர்வு, நோய் வாய்பட்டவர்களுக்கு, தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தேர்தலுக்கு முந்தைய நாள் காலை, 11:00 மணிக்கு ஓட்டுச்சாவடிக்கு சென்று, மறுநாள் இரவு, 11:00 மணிக்கும் மேலாக தொடர் பணியில் ஈடுபடுவதால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான உணவை, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
தேர்தல் தொடர் பணிக்கு ஆசிரியர்களுக்கு பதிலாக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் நிரந்தர பணியாளர்களை நியமிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தோம். தலைமை தேர்தல் அதிகாரியும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல்வர் அலுவலகத்தில் மனு
'ஜாக்டா' குழு சார்பில், முதல்வர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பிப்., 14ல், சென்னை, சேப்பாக்கத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ள, 'ஆசிரியர்கள் போராட்டம் ஏன்?' கருத்தாய்வு மாநாடு நடத்த உள்ளோம். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், 'புதிய ஓய்வூதியம் ரத்து, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும்' என்ற அறிவிப்பை வெவளியிட வேண்டும். ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment