Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 31, 2016

    தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு வங்கியின் துணை விதி மற்றும் அரசு விதிகளின்படியும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம்  தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல் பெற்று பணி நியமனம் செய்யப்பட உள்ளது.  மேலும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும்

    கீழ்க்காணும் தகுதிகள் பெற்ற மற்றும் கீழ்க்கண்ட இனத்துக்குரிய முன்னுரிமை/முன்னுரிமையற்ற பிரிவை சேர்ந்த இந்தியக் குடியுரிமையுடைய ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15/02/2016 பிற்பகல் 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

    விளம்பரம் எண்.1/2015-16 நாள் 30/01/2016

    தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட்., (இண்ட் 594)

    (தலைமையகம்) நெ.36. தெற்கு வாக்கரைச் சாலை, மந்தைவெளிபாக்கம், சென்னை-600 028

    தொலைபேசி : 044/24951509,  24950067 தொலைஅச்சு:  044/24950029

    மின்னஞ்சல்  : taicobank@ymail.com/taico@dataone.in

    இணையதளம்: www.taicobank.in

    பதவி: உதவியாளர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 19

    ஊதிய விகிதம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2200

    கல்வித் தகுதி: ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டப் படிப்பு (10+2+3 Pattern) (Any Degree)) மற்றும் ஓராண்டு காலம் பயின்ற கூட்டுறவு பயிற்சி / கூட்டுறவு பட்டயப்படிப்பு (அல்லது) பட்டப் படிப்பில் கூட்டுறவு (Cooperation) பயின்று தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி  செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டிய கடைசி நாள்: 15/02/2016 மாலை 5.00 மணி வரை

    தகுதிகள் விவரம்:

    1. வயது (01/01/2015 அன்று) விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

    2. விண்ணப்பதாரர் 01/01/2015 அன்று  கீழ்கண்டவாறு  இனவாரியாக  குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்சவயதினைக் கடந்தவராக இருத்தல் கூடாது.

    1. ஆதி திராவிடர், அருந்ததியர்,  பழங்குடியினர்  மற்றும் அனைத்து வகுப்பினைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் - 35 வயது

    2. மிகவும்  பிற்படுத்தப்பட்ட  வகுப்பினர்/  சீர் மரபினர்  மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 32 வயது

    3. மேற்குறிப்பிட்ட வகுப்பினைச் சாராத இதர வகுப்பினர் - 30 வயது

    4. மாற்றுத்  திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர்களுக்கு  அரசாணைப்படி  வயது வரம்பு விலக்களிக்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் முறை:

    1. பெறப்பட்ட விண்ணப்பங்கள்  பரிசீலனைசெய்யப்பட்டு, தகுதியுள்ள  விண்ணப்பதாரருக்கு மட்டுமே தேர்வு நுழைவு சீட்டு அனுப்பி வைக்கப்படும்.

    2. எழுத்துத்  தேர்வு  பட்டப் படிப்பு நிலையிலான தரத்துடனும், பொது  அறிவு, அடிப்படைக் கணக்கு, கூட்டுறவு  சட்டம் மற்றும் வங்கியியல் போன்ற பாடங்கள்  உள்ளடக்கியதாக இருக்கும்.   தேர்வு 120 நிமிடங்கள் கொண்டதாகவும் 85 மதிப்பெண்களுக்கானதாகவும் இருக்கும்.

    3. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் மற்றும் அரசாணைப்படி வகுப்பு வாரி சுழற்சி அடிப்படையிலும்

    காலிப் பணியிடங்களில் 1:3 என்ற  விகித அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு  அழைக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள்  அடிப்படையிலும் அரசாணைப்படி உள்ள  வகுப்பு/ இனவாரி சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர்.

    எழுத்து தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடங்கள்:

    எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம், தேர்வுக்கான நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்படும். நுழைவுச் சீட்டு விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு

    அனுப்பி வைக்கப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.

    விண்ணப்ப படிவம் மற்றும் எழுத்து தேர்வுக்கான கட்டணம்:

    விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் இணையதள முகவரி www.taicobank.in ல் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

    தேர்வு கட்டணம் ரூ.200/- (ரூபாய்  இருநூறு மட்டும்) ஆகும்.

    ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும்  ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு தேர்வுக்கான கட்டணம் செலுத்துவதிலிருந்து  விலக்களிக்கப்படுகிறது. தேர்வுக்கான கட்டணம் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் கிளைகளில்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளில் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட

    வங்கிகளில் Managing Director, TAICO Bank, Payable at Chennai என்ற பெயரில் வரைவோலையாக/தேசிய மின்னனு பணப் பரிவர்த்தனை (NEFT) மூலமாக தேர்வு கட்டணத்தை  செலுத்தலாம். 

    NEFT மூலமாக தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு கீழ்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

    ACCOUNT NUMBER: 708949954

    ACCOUNT NAME: TAICO BANK EXAMINATION FEES ACCOUNT

    IFSC NUMBER: TNSC 0015000

    BANKNAME: TAICO BANK, R.A.PURAM

    ACCOUNT TYPE: CURRENT ACCOUNT

    பூர்த்தி  செய்யப்பட்ட  விண்ணப்பத்துடன், வரைவோலை/NEFT மூலமாக  செலுத்துபவர்கள் வங்கியின் பெறப்படும் UTR எண் கொண்ட படிவத்தின் நகல் மற்றும் அனைத்து  சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்டு (Self attestation) விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்

    விண்ணப்பதாரர் பெயர் மற்றும் விலாசம் ஆகியவை வரைவோலையின் பின்புறம் எழுதப்பட வேண்டும்.வரைவோலை  இணைக்கப்படாத (ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவை (தவிர) விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்படும். ஒருமுறை செலுத்தப்பட்ட தேர்வுக் கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி வழங்கப்பட மாட்டாது.

    விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் மூலம் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு  தொழிற் கூட்டுறவு வங்கி  லிட்.,

    நெ.36.  தெற்கு  காவாக்கரைச்  சாலை, மந்தைவெளிபாக்கம், சென்னை - 600028 என்ற  முகவரிக்கு 15.02.2016 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள்  பூர்த்தி  செய்யப்பட்ட  விண்ணப்பங்களை  அனுப்புவதற்கு முன் கீழ்கண்டவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    i) பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். உரிய படிவத்தில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

    ii) விண்ணப்ப படிவங்கள் நீலம் அல்லது கருப்பு மையினால் கொண்ட Ball Point Pen ஆல் பூர்த்தி செய்யப்பட்டிருக்க  வேண்டும். விண்ணப்பதாரரின்  கையொப்பத்திற்காக  ஒதுக்கப்பட்ட இடத்தில் விண்ணப்பதாரர் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும். விண்ணப்பதாரரின் கையொப்பமின்றி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    iii) பணிகாலியிடப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள இனத்துக்குரிய/வகுப்புக்குரிய தகுதியான நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

    iv) விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய சாதிச் சான்றிதழ், முன்னாள் இராணுவத்தினர், ஆதரவற்ற விதவை ஆகியவற்றிற்கான சுய சான்றிடப்பட்ட  சான்றிதழை விண்ணப்பத்துடன்  இணைத்து  தவறாமல் அனுப்ப வேண்டும்.

    v) விண்ணப்ப படிவத்தில் அனைத்து காலங்களும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    vi) விண்ணப்ப  படிவத்துடன் தேர்வுக் கட்டணத்திற்கான வரைவேலை/NEFTமூலமாக செலுத்தி பெறப்படும் UTR எண் கொண்ட படிவத்தின் நகல் தவறாமல் இணைக்கப்பட வேண்டும்.

    vii) விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி மற்றும் நேரத்திற்குள் பெறப்படுமாறு அனுப்புதல் வேண்டும். கடைசி தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

    viii) விண்ணப்பம்  உரிய படிவத்தில்  இல்லாமலும்  கேட்கப்பட்ட  ஆவணங்கள்  நகல்  ஏதும் இணைக்கப்படாமல் இருந்தாலும் மேற்கூறப்பட்டுள்ள தகுதிகள் இல்லாதவர்களிடமிருந்தும் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    xi)    நேர்முக தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அசல் ஆவணங்கள் மற்றும் இரண்டு சான்றிடப்பட்ட நகல்களை பரிசீலனைக்கு கொண்டு வர வேண்டும்.

    x) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள இவ்வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் பணி நியமனம் செய்யப்படுவர் மற்றும் இப்பதவி தமிழகத்தில் உள்ள எந்த கிளைக்கும் மாற்றப்படக் கூடியது.

    No comments: