காலிப்பணியிடங்களை நிரப்பு வது உட்பட மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் தேர்தல் பணிகளை புறக்கணிப்பது என தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.மதுரையில் கிராம உதவியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: தமிழகத்தில் 33,500 கிராம உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. தற்போது 16,680 உதவியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பணி சுமை ஏற்படுகிறது.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அலுவலக உதவியாளர்களுக்கு போல கிராம உதவியாளர்களுக்கும் காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.பொங்கல் போனஸ் ரூ.௧,௦௦௦ அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது. இதுகுறித்து வருவாய் நிர்வாக கமிஷனருடன் ஜன.,11ல் மாநில நிர்வாகிகள் பேச உள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு போன்ற தேர்தல் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். ஜன., 22ல் சென்னையில் நடக்கும் அரசு ஊழியர் பேரணி, பிப்., 10ல் நடக்கும் காலவரையற்ற போராட்டத்தில் கிராம உதவியாளர்கள் பங்கேற்பர் என்றார்.
No comments:
Post a Comment