முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட, கற்றல் கையேடு புத்தகத்தை, சென்னை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதில், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள்விடுமுறையால், புத்தகம் வாங்க வந்த ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கற்றல் கையேடு வினியோக மையம் அமைக்கப்பட்டு, அங்கு சென்னை மாவட்ட பள்ளி ஆசிரியர்கள், புத்தகங்களை பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டது.
பல பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள், மாணவர் பட்டியலுடன், மாநில மகளிர் பள்ளிக்கு, நேற்று முன்தினம் கையேடு புத்தகம் வாங்க காத்திருந்தனர். ஆனால், அந்த மையம் பூட்டப்பட்டிருந்தது. புத்தகம் வழங்கும் அதிகாரி நீண்ட நேரம் வராததால், ஆசிரியர்கள் காத்திருந்து
ஏமாற்றத்துடன் திரும்பினர்.
No comments:
Post a Comment