தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நியமிக்கப்பட்ட 18,205 ஆசிரியர்களுக்கு, 7 மாதங்களாக தாமதமாக சம்பளம் வழங்குவதால்
அவதிக்கு உள்ளாகின்றனர். திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தலைவர் முருகேசன், செயலர் ஜெகதீஷ்குமார், பொருளாளர் பிரான்சிஸ் பிரிட்டோ ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 7,979 பட்டதாரி ஆசிரியர்களும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் மூலமாக 6,872 பட்டதாரி ஆசிரியர்களும், 1,590 முதுகலை ஆசிரியர்களும், 1,764 ஆய்வக உதவியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
சம்பளம் வழங்குவதற்கான ஆணை மாதம்தோறும் தாமதமாக வழங்கப்படுகிறது. இதனால் கடந்த 7 மாதங்களாக, சம்பளம் பெறுவதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கருவூலத்தில் கேட்டால் எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்கின்றனர். அவர்களை தொடர்பு கொண்டு கேட்டால் நிதித்துறை தாமதம் என அலைக்கழிக்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் ஊதியம் 15ம் தேதி முதல் 20ம் தேதிக்கு இழுத்தடிக்கப்படுகிறது. மாத ஊதியம் பெறும் ஆசிரியர்கள் வீட்டுக்கடன், வங்கிக்கடன், பால், மளிகை பொருட்கள், குழந்தைகளின் படிப்பு செலவு, வாகனங்களுக்கு பெட்ரோல், பஸ் செலவிற்கு கூட பணம் இல்லாமல்
அவதிப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment