கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் வரும் ஜனவரி 5 முதல் 8-ஆம் தேதி வரை கல்வித்தர அடைவு சோதனை நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வ.மல்லிகா தெரிவித்ததாவது:
தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் 3,5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வித்தர அடைவு சோதனை வரும் ஜனவரி 5 முதல் 8-ஆம் தேதி வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.
அரசு, நகராட்சி, நலத்துறை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இச்சோதனை நடைபெற உள்ளது. இதற்கென ஒவ்வோர் ஒன்றியத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்களுக்கு 10 பள்ளிகளும் 15 மாணவர்களுக்கு 6 பள்ளிகளிலும், 1 ஆங்கில வழிப் பள்ளியிலும் மொத்தம் 16 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில் இச்சோதனையை நடத்த வேண்டும். இதேபோல், 8-ஆம் வகுப்புக்கு 10 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அடைவுச் சோதனை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment