தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான, மூன்றாம் கட்ட நியமனத்துக்கு, 2015 ஜூனில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, பிப்.,1ல் நடக்கிறது.
தமிழக வேளாண் துறையில் உதவி தோட்டக்கலை அதிகாரி பணிக்கான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலும், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையில், 213 உதவி பொறியாளர் (கட்டிடவியல்) காலியிடங்களுக்கு, 2015 செப்., 6ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் நேர்காணலில் பங்கேற்றவர்களுக்கான மதிப்பெண் பட்டியலையும் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment