வங்கி ஊழியர்கள், இன்று, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், மூன்று நாட்களுக்கு வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இன்று, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும், ஐந்து லட்சம் வங்கி ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததால், இந்த இரண்டு வங்கிகளிலும் வேலை நிறுத்தம் நடக்காது.மேலும், இன்றைய வேலை நிறுத்தத்தில், வங்கி அதிகாரிகள் பங்கேற்கவில்லை என, அறிவித்து உள்ளனர்.வங்கி ஊழியர், இன்று வேலை நிறுத்தம்; நாளை, இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை; ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு வங்கிகள் இயங்காது; இதனால், பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
கோரிக்கைகள் என்ன?
* 'ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் பட்டியாலா' ஆகிய, பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்.
* ஊழியர்களுக்கு எதிரான, வேலை நேர நிர்ணயத்தை வாபஸ் பெற வேண்டும்
No comments:
Post a Comment