தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் சு.அருணாசலம் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேர ஊக்குவிக்கும் புதிய திட்டங்களை அரசு அலுவலர் ஒன்றியம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதிய பணியாளர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம் என்றார் அவர்.
நிர்வாகிகள் எம்.பி.ராதாகிருஷ்ணன், சிவ.நக்கீரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment