காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீத் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 24 ஆம் தேதி முஃப்தி முகமது சயீத்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் இருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு கொண்டுவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
வரும் 18 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் முஃப்தி முகமது சயீத் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது மகள் முப்ஃதி மெகபூபா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக விரைவில் பதவியேற்கலாம் என்றும் கூறப்பட்ட நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்துவிட்டது.
கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி இரண்டாவது முறையாக ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக பொறுப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment