'முதல்வருடன் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்த அமைச்சர், அதன் பின், எங்களைக் கண்டு கொள்ளவில்லை' என, சத்துணவு ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.சத்துணவு ஊழியர்களின் மாநில மாநாடு, கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில், 'சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்;
சத்துணவு துறையை தனி துறையாக அறிவிக்க வேண்டும்' என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதுகுறித்து, சத்துணவு ஊழியர் சங்க மாநில நிர்வாகி அண்ணாதுரை கூறியதாவது:கோரிக்கைகளுடன் கோட்டை நோக்கி செல்ல முயன்ற சத்துணவு பணியாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 'முதல்வரிடம் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்' என, அமைச்சர் வளர்மதி உறுதி அளித்தார்; இதுநாள் வரை
நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் பேசினார். - நமது நிருபர் -
No comments:
Post a Comment