Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, January 18, 2016

    பகுதிநேர ஆசிரியர்களுக்கான செய்தி : விடியலை தேடுங்கள்-வீணான பொய் செய்திகளை புறந்தள்ளுங்கள்

    அருமை பகுதிநேர ஆசிரியர்களே. நமக்கெல்லாம் 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த பகுதிநேர ஆசிரியர் பணி ஆணை கிடைத்தது முதல் இன்றுவரை சிலர்  சொன்ன ஆயிரம் பொய்கள் எல்லாம் என்ன ஆனது?.. முதலில் ஓவிய ஆசிரியர்களை இந்த ஆணையில் போராடி அரும்பாடுபட்டு சேர்க்கசொன்னதாக சொன்னார்கள், பிறகு அதைப்போலவே ஒவ்வாரு பாடப்பிரிவுகளையும் சேர்க்க சொன்னதாககூட சொன்னார்கள்.


    இதெல்லாம் உண்மையில்லை. ஆனால் வேறு எந்த மாநிலத்திலும் சேர்க்கப்படாத கணினி பாடத்தை இங்கு மட்டும் சேர்த்து தானாக வருகின்ற வாய்ப்பையும் பறித்துவிட்டனர். கணினி தவிர மற்ற சிறப்பு பாடங்களுக்கு அவ்வப்போது வேலை வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமது பொய்யர்களால் முதலில் ஊதியம் பத்தாயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றார்கள், முழு நேரமாக்கப்படும் என்றார்கள். பிறகு 3 முழுநாள்-12000 ஊதியம் என்றார்கள், அதன் பிறகு 5 அரைநாள்-15000 ஊதியம் என்றார்கள். நமக்கான கோப்புகள் கையொப்பத்திற்காக அங்க இருக்கு-இங்க இருக்கு என்றெல்லாம் ஊதி தள்ளுகிறார்கள். தற்போது உச்சகட்டமாக பணிநிரந்தரம் செய்யப்படும் என்கிறார்கள். கொஞ்சம் விட்டால் இந்த அரசாணைகூட இவர்களே அரசை போட சொன்னதாக கூட சொல்வார்கள்.இந்தியா முழுவதும் இந்த திட்டத்தில் நம்மை போலவே பணிபுரிந்து வருகிறார்கள். அந்தந்த மாநிலங்களில் அரசாணையில் ஜுன் மாதம் பள்ளி திறக்கும்போது வேலை உண்டு, அதைப்போலவே ஏப்ரல் மாதத்தில் பள்ளி முடியும்போது வேலை இல்லை என்று மிகத்தெளிவாக இந்த பகுதிநேர வேலையை பற்றி குறிப்பிட்டுள்ளனர். மாதத்திற்கு மொத்தம் 24 பாடவேளைகள் மட்டுமே என்றும், ஊதியம் 1 பாடவேளைக்கு ரூ.100 ஒரு மாநிலத்திலும், ரூ.150 இன்னொரு மாநிலத்திலும், ரூ.5200 ஒரு மாநிலத்திலும், ரூ.6000 ஒரு மாநிலத்திலும் வழங்கப்பட்டுவருகிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் முதல் வருடம் பணி முடிந்து அடுத்த வருடத்தில் புதுப்பிக்கப்பட்டும், தேவைப்பட்டால் புதிய பணி நியமனமும் கடைபிடிக்கப்படுகிறது. கோவா மாநிலத்தில் மட்டுமே அதிகபட்சமாக ரூ.15000 வழங்கப்படுகிறது. ஆனால் கோவாவில் மார்ச் 2016வரை மட்டுமே பணி வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் பங்காக 65%, மாநில அரசின் பங்காக 35% என்ற வகையில் இந்த திட்டம் நாடு முழுவதும் அமுலில் உள்ளதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளாதவரை அவர்களுக்கு கொண்டாட்டம்தான்.

    மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்தால் ஏப்ரல் 2014ல் நடந்த 210வது PAB
    கூட்ட முடிவின்படி (Government of India Ministry of Human Resource Development Department of School Education and Literacy 
    *** Minutes of the 210th PAB meeting held on 03rd April, 2014 for approval of the Annual Work Plan & Budget of Sarva Shiksha Abhiyan (SSA))அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் உள்ள அனைத்து தொகுப்பூதிய பணிகளுக்கும், மேலும் அதன் பராமரிப்பு பணிகளுக்கும் 15%  ஊதிய உயர்வு, திட்ட மதிப்பீடு உயர்வு வழங்கபட்டது. ஆனால் பொய்யர்கள் அனைவரும் பகுதிநேரஆசியர்களுக்கு மட்டுமே வாங்கித்தரப்பட்டதாக சொன்னார்கள். அப்படியானால் நம்மோடு உள்ள அ.க.இ. Programmer, Civil Engineer, Accounts and Audit Manager, Data Entry Operators, Office Assistant, Consultants (State level) (officer cadre), Consultant(Clerical cadre), Sweepers, Driver, MIS Co-Ordinator, Block Accountant/VEC Accountant ஆகியோர்களுக்கு யார் கேட்டு வாங்கி தந்தது. இதெல்லாம் பொய்யர்களின் தவறில்லை. நாட்டு நடப்பு தெரியாமல் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் வெறுமனே செய்தி மட்டும் கேட்டுத்தெரிந்து கொள்ள ஆசைப்படும் உங்களின் தவறு. வேலையின் எதிர்காலம் குறித்து அக்கறையோடு கோரிக்கைகளை கேட்டு மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர்வரை மனு எழுதி கவனத்தை ஈர்த்திருக்கவேண்டும். ஒரே ஒரு மனு கொடுக்ககூட தைரியமில்லாமல் யாராவது கேட்கவேண்டும், எப்படியாவது நல்லது நடக்கவேண்டும் என்றே இன்றுவரை 95%பேர் நினைத்தால் எப்படி நடக்கும்??.

    இப்பொழுதாவது நமக்கான அரசாணைகளை மீண்டும் ஒருமுறையாவது படித்து பாருங்கள். முதலில் அரசாணையில் சொன்னதை தொடர்ந்து கேளுங்கள். திட்டத்தின் அடிப்படையிலான வேலையாக உரிமை கோர முடியாத வகையில் அரசாணை தயாரிக்கப்பட்டு உள்ளதால் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் அரசியல் ஆதாயத்திற்காக ஏதாவது செய்ய விரும்பினால் மட்டுமே அதிசயம் இல்லையென்றால் பயம்தான். இது தான் உண்மை. பிறகு அரசின் கொள்கை முடிவினை நமக்காக மாற்ற தொடர்ந்து உனது வேலைக்கு உனது பங்கு என்ற நிலையில் ஒவ்வொருவரும் கோரிக்கை மனு செய்யுங்கள். அதைவிடுத்து தினந்தோறும் பகுதிநேர ஆசிரியர்களுக்கான நல்ல செய்தி இதோ/அதோ/விடியற்காலை/நாளை மதியம்/இரவு 11 மணி என்று மனதிற்கினிய பொய் கதைகளை நீயாக கேட்டு கேட்டு வீணாக பொழுதை கழிக்காமல் தைத்திருநாள் முதல் களப்பணி ஆற்றிட வாருங்கள். மே மாதம் ஊதியம், கூடுதல் பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பு, மாதம் முதல் தேதியில் ஊதியம், பணிநிரவலை கைவிட்டு பொது மாறுதல், பண்டிகை போனஸ் போன்ற ஒரு கோரிக்கையைகூட வெல்லாமல் நமக்கு எதற்கு இத்தனை சங்கங்கள் என்று இனியும் தாமதிக்காமல் முதலில் ஒவ்வொருவரும் கோரிக்கை மனுக்களை அனுப்பி தீர்வு காணுங்கள்-
    நிச்சயம் பதில் கிடைக்கும். நம்பிக்கையுடன்
    செந்தில்(9487257203) கடலூர் மாவட்டம்.

    No comments: