முறைகேட்டை தட்டிக்கேட்ட, திருவாரூர் அரசு கல்லுாரி முதல்வர் தாக்கப்பட்டதை கண்டித்து, சென்னையில், பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாரூர் அரசு கலைக் கல்லுாரி முதல்வர் பொறுப்பில் இருந்த பேராசிரியர் சிவராமன் மீது, கடந்த வாரம், கல்லுாரி ஊழியர் ஒருவரே, கூலிப்படையை ஏவி, தாக்குதல் நடத்தியுள்ளார்.பேராசிரியர்கள் அளித்த புகாரின்படி, கல்லுாரியின் எழுத்தர் சம்பத் மற்றும் கூலிப்படையினரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில், பேராசிரியர்கள் நேற்று, கல்லுாரிகள் முன் போராட்டமும், சென்னையில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தியுள்ளனர்.
பேராசிரியர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை.
கல்லுாரிக்கு போதையில் வந்த ஊழியரை, முதல்வர் பொறுப்பில் இருந்த சிவராமன் கண்டித்தார். இதனால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேர்மையான ஆசிரியர்கள், அரசியல் செல்வாக்கால் ஆங்காங்கே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீறினால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.- லோகநாதன்,கல்லுாரி ஆசிரியர் மன்ற தலைவர்
No comments:
Post a Comment