Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 7, 2016

    "புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும்"

    தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவை கலைக்க வேண்டும் என கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். தேசிய புதிய கல்விக் கொள்கை உருவாக்கம் தொடர்பாக கோவை ராமநாதபுரம் மறைமாவட்ட கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் அமைத்துள்ள குழுவின் கருத்தரங்கு கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


    குழுவின் ஒருங்கிணைப்பாளரும் ராமநாதபுரம் ஆயருமான மார்ட் பவுல் ஆல்பர்ட் தலைமை வகித்தார். கல்வியாளர் ஸ்டீபன் பிரகாசம், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பாதிரியார் எஸ்.எம்.ஜான் கென்னடி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கைத் தொடர்ந்து, பிரின்ஸ் கஜேந்திர பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கல்விக் குழுவில் கல்வியாளர்களே இடம் பெறாமல் இருப்பது இதுவே முதல் முறை. இந்தியா கூட்டாட்சி நாடு என்பதால் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த கல்வியாளர்களையும் கல்விக் குழுவில் இணைத்திருக்க வேண்டும்.

    பின்னர் அந்தக் குழுவினர் மக்களிடம் நேரடியாக பொது விசாரணை நடத்தி, அதன் பிறகு கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

    No comments: