Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, January 9, 2016

    பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவுகளை கொண்டு வருவதை தடுக்க கடும் சோதனை: சிபிஎஸ்இ

    பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவு வகைகளைக் கொண்டு வருவதையும், பள்ளி கேன்டீன் மற்றும் 200 மீட்டர் பரப்பில் ஜங்க் உணவுகள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சிபிஐஎஸ் பள்ளிகளுக்கு நிர்வாகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. பள்ளி மாணவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை பரிசோதித்து, அவை உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுதான் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு சிபிஎஸ்சி நிர்வாகம் கூறியுள்ளது.


    அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை அதிகம் இருக்கும் உணவு பொருட்கள் காரணமாக இரண்டாம் நிலை நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் மாணவர்களுக்கு ஏற்படக் காரணமாக இருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பள்ளி கேன்டீன்களிலும் ஜங்க் உணவுகள் விற்பதை தடுக்கவும், சுகாதாரமான உணவுகள் விற்பனை செய்வதை உறுதி செய்யவும், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    No comments: