போலி எஸ்சி சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலித் உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆசிரியர் பணியில் சேர்ந்ததாக பாலக்கோடு முனியப்பன், கிருஶ்ணகிரி செந்தில்குமார் ஆகியோருடன் இவர்களுக்கு உதவியாக இருந்த ராஜேந்திரன் ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஆதிதிராவிடர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று போலிச் சாதிச் சான்றுகளை அளித்து பணியில் சேர்ந்துள்ளனர். எனவே இவர்கள் இருவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்களது சொத்துகளை ஜப்தி செய்ய வேண்டும். போலிச் சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள், உடனிருந்த அரசு அலுவலர்கள், தரகர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
No comments:
Post a Comment