மதுரை மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தொகுப்பூதியத்தில் துப்புரவு பணியாளர்களை நியமிக்கலாம், என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவிட்டார். மேலுார் கல்வி மாவட்ட தலைமையாசிரியர்கள் கூட்டம், டி.இ.ஓ., துரைப்பாண்டி தலைமையில் நடந்தது. இதில், ஆஞ்சலோ இருதயசாமி பேசியதாவது:
விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், நோட்டுக்கள் வழங்க வேண்டும். பத்தாவது, பிளஸ் 2 மாணவர்கள் அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற தலைமையாசிரியர்கள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பள்ளி கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
இதற்காக அரசு உத்தரவுப்படி ரூ.1500 (உயர்நிலை பள்ளி), ரூ.2000 (மேல்நிலை பள்ளி) தொகுப்பூதியம் அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை தலைமையாசிரியர், கிராம கல்விக் குழுவே நியமிக்கலாம், என்றார்.
No comments:
Post a Comment