தமிழ்நாடு மின் வாரிய உதவிப் பொறியாளர் தேர்விற்கு, மூன்று நாட்களில், 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாடு மின் வாரியம், ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க, எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவில் பிரிவுகளில், 375 உதவிப் பொறியாளர்களை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, டிச., 28ல் வெளியானது. சென்னை, அண்ணா பல்கலையில், ஜன., 31ல் எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகிய மூன்று நாட்களுக்குள், 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக அரசின் மற்ற துறைகளை விட, மின் வாரியத்தில் தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. முதல் முறையாக, அண்ணா பல்கலை மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படுவதால் முறைகேடு குறையும் என்ற நம்பிக்கை பட்டதாரிகளிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment