*ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு பணி துப்புறவு பணிகளை மேற்கொள்ளுதலுக்கு நன்றி தெரிவித்ததோடு அவற்றை நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை வைக்கப்பட்டது.
*ஈராசிரிர் பள்ளிகளில் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்களை விடுவித்தல் பற்றி மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.
SSTA -வின் புத்தாண்டு அதிரடி அசத்தல்
'"காலண்டர் வெளியீடு '"
*தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு
*SSTA-வின் 2016 ஆம் ஆண்டிற்கான முதல் காலண்டர் மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
*கடந்தாண்டும் இதே (11.01.2015) நாளில் தான் SSTA வின் 2015 ஆம் ஆண்டு காலண்டர் விழுப்புரம் மாநில செயற்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
* SSTA -வின் இந்த ஆண்டின் முதல் வெற்றி!!!
மூன்றாண்டுக்குள் இரண்டாண்டு தகுதிகாண் பருவம் முடித்துள்ள ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான ஆணை (Probationary period ) பல மாவட்டங்களில் வழங்கப்படாமலிருப்பதால் அவற்றை தமிழகம் முழுவதும் உடனடியாக வழங்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது .சில ஒன்றியங்களில் 2006ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு கூட வழங்கப்படாமல் உள்ளது ...இதில் அதிகம் பாதிக்கப்படுவது -2012 ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் என -18000 பேர் என எடுத்துரைக்கப்பட்டது ... இயக்குனர் அவர்கள் SSTA வின் கோரிக்கையை ஏற்று இரண்டு வருடம் பணி நிறைவு பெற்றவர்களின் விவரங்களை உடனடியாக சேகரிக்க உத்தரவிட்டுள்ளார்...
ஓரிரு நாளில் அதற்கான கடிதம் வெளியாகி மிக விரைவில் அதற்கான தீர்வு காணப்படும் என்றார்.... புத்தாண்டில் SSTAவிற்கு கிடைத்த முதல் வெற்றி!!!
*உயர்கல்வி பயின்றமைக்கு பின்னேற்பு வழங்குதல் கால தாமதமாகிறதை சுட்டிக்காட்டி கேட்டுக்கொண்டதன் பேரில் ,ஆசிரியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதை விரைவில் செய்துமுடித்து தருவதாகவும் உறுதி கூறியுள்ளார்.
*கனமழையால் 5 மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளி வேலைநாட்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டங்களுக்கு வேலைநாட்களை 200 ஆக குறைத்தல் சம்மந்தமாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குனர் அவர்கள் அரசிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
*துப்புரவு பணியாளர்கள் நியமனம் ,நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்...
ஆசிரியர்களின் பேராதரவுடன் தொடர் வெற்றிகளை குவிக்கும்
உங்களுக்கான ��SSTA�� உணர்வுக்காக குரல் கொடுப்போம்!!! உரிமைக்காக உயிர் கொடுப்போம்!!!
No comments:
Post a Comment