கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருவள்ளுவர் ஓவியத்தில் குறள்களை எழுதியும், 24 மணி நேரத்தில் 1330 குறள்களையும் தலைகீழாக எழுதியும் இரட்டை சாதனை படைத்துள்ளார். கோவை ஆலாந்துறையைச் சேர்ந்த லதா- சுப்பிரமணியத்தின் ஒரே மகள் எஸ்.ஹரிப்பிரியா (24). எம்.எஸ்சி ஃபேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவருக்கு சிறுவயதிலேயே படிக்கிற வாசகங்களை தலைகீழாக எழுத வேண்டும் என்ற ஆசை. கணித எண்கள், தமிழ், ஆங்கில வார்த்தைகளை இடமிருந்து வலம் எழுதுவதற்கு பதிலாக, வலமிருந்து இடமாக தலைகீழாக எழுதி, பார்த்தார். பிளஸ் 2 படிக்கும்போது நேரம் கிடைக்கும் நாளில் 1330 திருக்குறளையும் சுமார் 2 ஆண்டுகளில் எழுதி முடித்தார்.
அதையே நுணுக்கி, எழுதினால் எத்தனை பக்கத்தில் எழுதமுடியும் என்பதை அறிய அரிசியில் வார்த்தை களை எழுதக்கூடிய (லென்ஸ் வைத்து பார்த்தால் மட்டுமே படிக்க முடியும்) பேனா நிப் பயன்படுத்தி எழுத ஆரம்பித்தார். அதையே. திருவள்ளுவர் ஓவியத்தில் எழுதி னால்...? 3 அடிக்கு 1.5 அடி உயர, அகலமுள்ள ஓவியத்தில் உள்ள வள்ளுவரின் தாடியிலும், ஆடையிலும் மட்டும் எழுதினார். 1330 குறளையும் தலைகீழாக 3 நாளில் எழுதி முடித்தார்.
அண்மையில் கரூரில் நடந்த விழாவில் இவை இரண்டுக்கும் தனித்தனியே ‘ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்’ஸின் தேசிய மற்றும் ‘உலக சாதனை’யை (national and world-record) பெற்று வந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதா வது: ‘‘ஆங்கிலம், தமிழ், இந்தி மற் றும் கணித எண்களை தலை கீழாக வேகமாக எனக்கு எழுத வரும். போட்டி பரிசுன்னு போனதில்லை. எங்க பகுதியில் உள்ள நாட்டியப்பள்ளி ஆசிரியை ஒரு வர், ‘திண்டுக்கல்லில் 3000 பேரை வைத்து திருக்குறள் பாடலுடன் கூடிய நாட்டிய உலக சாதனை நிகழ்வு நடக்கிறது. அதில் 5 ரெக் கார்டு அமைப்புகள் கலந்து கொள் கின்றன. அந்த அமைப்பினரைச் சந்தித்து எழுதியிருக்கும் திருக் குறள்களை காட்டலாமே’ என்று அழைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் 2 அமைப்புகளிடம் திருக்குறள் களைக் காட்டினேன். அவர்கள் திருவள்ளுவர் ஓவிய குறள்களை கணக்கில் எடுத்துக் கொண்டனர். மற்றபடி 1330 குறளை தலைகீழாக ஏற்கெனவே பலர் எழுதியுள்ளனர். அதில் உலக சாதனையாளர்கள் 2 நாள் வரை நேரம் எடுத்துள்ளார்கள். நீங்கள் நடுவர்கள் முன்னிலையில் எழுதி அந்த சாதனையை முறியடிக்க முயற்சிக்கலாம் என்றார்கள்.
ஆலாந்துறையில் இதற்காக நியமிக்கப்பட்ட நடுவர் முன்னிலை யில் எழுதி னேன். 24 மணிநேரம், 35 நிமிடம், 35 நொடிகளில் அத்தனை திருக் குறளையும் தலைகீழாக எழுதி முடித்தேன். தமிழ்மொழியின் அரும்பெரும் மறையான திருக் குறளை உலகு அறியச் செய்ய வேண்டும் என்பதே எனது விருப் பம். அதற்காகவே இதை செய்துள் ளேன்’’ என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment