தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 'நடா' புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் நாகை அருகே இன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நாகை அருகே கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது நாகைக்கு மேற்கே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளப் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் டிசம்பர் 4-இல் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment