டிசம்பர் 2ம் தேதி வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பழைய ரூ.500 நோட்டு பெறப்படும் எனவும், விமான பயணங்களுக்கும் 2ம்தேதி இரவு வரை மட்டுமே பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி டிக்கெட் எடுத்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் பழைய ரூ.500 நோட்டுக்கள் இன்று இரவுக்குப் பின் காஸ் சிலிண்டெர் வாங்க மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், பொது மக்கள் நலன் கருதி, ரூ.500 நோட்டு பெட்ரோல் பங்குகளில் பெறப்பட்டு வந்தது. இது பின்னர் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கால அவகாசம் டிசம்பர் 15ம் வரை நீட்டிக்கப்பட்டது. அதுவரை பெட்ரோல் பங்குகளில் பழைய ரூ. 500 நோட்டுக்களை பொது மக்கள் பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த கால அவகாசம் நாளை இரவுடன் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment