சம்பள நாளை முன்னிட்டு வங்கிகளுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுவதால் வங்கிகளில் பணம் எடுக்க சிறப்பு கவுண்டர்கள் அமைக்கவும், வங்கிகளுக்கு பரிவர்த்தனைக்காக வழங்கப்படும் பணத்தின் அளவை 20-30 சதவீதம் அதிகப்படுத்தவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
நவ.,8 ம்தேதி நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளில் பணம் போடுவது மற்றும் எடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யவும், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கவும் கூட்டம் அலைமோதிவருகிறது.
அதிகரிப்பு
இந்நிலையில் இன்று (டிச.1ம் தேதி) சம்பள நாளாக இருப்பதால் வங்கி கணக்குகள் மூலம் மாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியர்கள் இன்று முதல் ஏ.டி.எம்.,களுக்கு படையெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பண தட்டுப்பாட்டை போக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி வங்கிகளுக்கு தினந்தோறும் பரிவர்த்தனைகளுக்கான அனுப்பப்படும் பணத்தின் அளவை 20-30 சதவீதம் வரை அதிகரிக்கவும், ஏ.டி.எம்.,களில் நாள் ஒன்றிற்கு ரூ 2,500 மட்டும் எடுக்கவே முடியும் என்ற வரைமுறை இருப்பதால் பலர் தங்கள் காசோலை மூலம் பணம் எடுக்க வங்கிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதையடுத்து வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment