அரசு ஊழியர்களுக்கு, சம்பளத்தில், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக அளிக்கப்படும்' என, தெலுங்கானா அரசு தெரிவித்து உள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில், பணம் எடுக்கவும், நிபந்தனைகள் உள்ளன. இதனால், 'நவ., மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும்' என, தெலுங்கானா அரசிடம், அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனால், மாநிலத்தின் அனைத்து வங்கிகளிலும், அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு தனி கவுன்டரை, அம்மாநில அரசு ஏற்படுத்தி உள்ளது. ஊழியர்கள் அங்கு சென்று, இன்று முதல், 10ம் தேதி வரை, தங்கள் ஊதியத்தில், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக பெறலாம். இதற்காக, வங்கிகள் கூடுதல் நேரம் செயல்படும்.மீதமுள்ள தொகை, அவர்களின் வங்கி கணக்குகளில், வரவு வைக்கப்படும்; தேவைப்படும் போது, ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுத்துக் கொள்ளலாம் என, தெலுங்கானா அரசு தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment