Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 1, 2016

    ’ஆங்கில மொழி அறிவை வளர்த்து கொள்ளுங்கள்’!

    ’மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர், சர்வதேச அளவில் பணியாற்ற தயாராகும் வகையில், ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என, ’தினமலர்’ ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஆலோசனை கூறியுள்ளார்.


    கடந்த ஆண்டு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில், ’ரேங்க்’ பெற்ற மாணவியருக்கு, ’தினமலர்’ ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ’தினமலர்’ ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி, ’ரேங்க்’ பெற்ற மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    அக்னி சிறகுகள்: ’தினமலர்’ நிறுவனர், டி.வி.ராமசுப்பையர் உருவப்படம் பதித்த, நினைவுப் பரிசும், மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய, ’அக்னி சிறகுகள்’ புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது. 

    பின், மாணவ, மாணவியரை வாழ்த்தி, ’தினமலர்’ ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும், மாணவ, மாணவியரை, இந்த நிகழ்ச்சியில் பார்க்கும் போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாணவ, மாணவியர், கல்வியில் ஒதுக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம், எனக்கு ஏற்பட்டது. 

    அதனால், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்காக, தனியாக, 16 ஆண்டு களுக்கு முன், ’ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியை துவக்கி, நடத்தி வருகிறோம். இந்நிகழ்ச்சியில், பரிசு பெற்ற மாணவியர், பொதுத்தேர்வில் ஏராளமான மதிப்பெண்களை அள்ளிக் குவித்துள்ளனர். 

    இது, மகிழ்ச்சியான விஷயம். ஆனால், நான்கு ஆண்டுகளை பார்க்கும் போது, மாணவியரை விட, மாணவர்கள் குறைந்த அளவில் தான் பரிசு பெறுகின்றனர். எனவே, மாணவர்களும், அதிக மதிப்பெண் பெற்று, பரிசு பெற தயாராக வேண்டும். நீங்கள் அனைவரும், ஆங்கில அறிவை பெருக்கிக் கொள்ள வேண்டும். 

    உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்க, உலக மொழியான ஆங்கிலத்தை பேசவும், எழுதவும் தெரிந்து கொள்ளுங்கள். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஆங்கிலம் என்பது சர்வதேச மொழியாகி விட்டதால், உலக அளவில் பணியாற்றும் வகையில், ஆங்கிலத்தை கட்டாயம் கற்றுக் கொள்ளுங்கள். 

    உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு, ஆங்கில மொழி நிச்சயம் உதவும். அதை கற்கும் போது, அகராதி புத்தகம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கற்றலுக்கு, அகராதி புத்தகம் துணையாக இருக்கும். தேர்வில், நீங்கள் நிறைய மதிப்பெண் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    பரிசு பெற்ற மாணவியர்: 

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சென்னை பள்ளிகளில், 492 மதிப்பெண் பெற்று, சைதாப்பேட்டையில் உள்ள, பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், புவனேஸ்வரி மற்றும் அனிதாவும் முதலிடம் பெற்றனர். 489 மதிப்பெண்களுடன், கோயம்பேட்டில் உள்ள, சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயப்பிரியா, சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மல்வின் ரோஷனும், இரண்டாம் இடம் பெற்றனர்.

    பெரம்பூர் மார்க்கெட் தெருவிலுள்ள, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சிந்தா, 488 மதிப்பெண்களுடன், மூன்றாமிடம் பெற்றார். மூவரும், ’ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் பாராட்டப் பட்டனர்.

    ஆசிரியருக்கு கவுரவம்: 

    கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சைதாப்பேட்டை பகுதி, வெள்ளத்தில் தத்தளித்தது. சென்னை மாநகராட்சி பெண்கள் பள்ளியிலும், வெள்ளத்தால் அதிக சேதம் ஏற்பட்டது. அதனால், ஒரு மாதத்திற்கு மேல் வகுப்புகள் பாதிக்கப்பட்டன. அப்படிப்பட்ட நிலையிலும், மாணவியருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

    அதை தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சைதாப்பேட்டை பள்ளி மாணவியர், சென்னை மாநகராட்சி பள்ளி அளவில், முதல், இரண்டாம், ’ரேங்க்’ பெற்றனர். இந்த கடின உழைப்பை பாராட்டி, சைதாப்பேட்டை, சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர், பி.ஜி.லைலாவை மேடைக்கு அழைத்து, ’தினமலர்’ ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, பரிசளித்து வாழ்த்தினார்.

    புத்தகங்கள் வினியோகம்: 

    பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய வினாக்களின் தொகுப்பு, தேர்வுக்கு பயமின்றி தயாராவதற்கான வழிமுறைகள் அடங்கிய, ’உடம்பும் மனசும் நல்லா இருக்கணும்’ மற்றும் இறையன்பு, ஐ.ஏ.எஸ்., எழுதிய, ’ஜெயித்துக் காட்டுவோம்’ ஆகிய புத்தகங்கள், மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன.

    பேராசிரியர் பர்வீன் சுல்தானா, மனநல பயிற்சியாளர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் உரையாற்றினர். மாநகராட்சி பள்ளிகளின் கல்வி அதிகாரி, ரஞ்சனி மேற்பார்வையில், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள், மாணவ, மாணவியரை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    வழிகாட்டிய ஆசிரியர்கள்: 

    தமிழ் - என்.தாயுமானவன், ராமகிருஷ்ணா உறைவிட உயர்நிலைப் பள்ளி, மயிலாப்பூர்ஆங்கிலம் - யு.முனிராமையா, சென்னை உயர்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ., காலனிகணிதம் - சுரேஷ், பி.ஏ.கே. பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளி, வண்ணாரப்பேட்டைஅறிவியல் - பி.ஆனந்தன், இந்து மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணிசமூக அறிவியல் - வி.யுவராஜ், சென்னை மேல்நிலைப் பள்ளி, சுப்பராயன் தெரு, ஷெனாய் நகர்.

    நான் சராசரி மதிப்பெண் பெறும் மாணவி. இந்நிகழ்ச்சி, எனக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது. ஏற்கனவே பெற்றதைவிட, அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. சுல்தானா பேகம் , அம்மையம்மாள் சென்னை மேல்நிலைப்பள்ளி, புளியந்தோப்பு

    ஆங்கிலத்தில் இலக்கணம், கணிதத்தில், வரை கணிதம் குறித்து, ஆசிரியர்கள் எளிமையாக புரிய வைத்தனர். அறிவியலில் முக்கிய வினாக்கள் எவை என்று, தெரிந்து கொண் டேன். வினோத் , சென்னை மேல்நிலைப்பள்ளி, கோயம்பேடு

    ஆங்கில பாடம் கடினமானது அல்ல; புரிந்து படித்தால் எளிது என்பதையும், நேரத்தை சரியாக வகுத்து, கவனக்குறைவை தவிர்த்தால், கணிதத்தில், 100 மதிப்பெண்கள் பெறலாம் என்பதை, இந்த நிகழ்ச்சியால் தெரிந்து கொண் டேன். ஏ.வைஷ்ணவி சென்னை மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி

    கணக்கு பாடம் மட்டுமின்றி, மற்ற பாடங்களிலும் நுாறு மதிப்பெண்கள் பெற முடியும் என்பதை, இந்த நிகழ்ச்சியில் அறிந்தேன். இதுவரை படிக்காத மாணவர்களை, படிக்க வைக்கவும்; படிக்கும் மாணவர்களை, இன்னும் நன்றாக படிக்க வைக்கவும், இந்த நிகழ்ச்சி உதவுகிறது. பவானி, சென்னை மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர்

    இப்படி தான் சாதித்தேன்... நீங்களும்?

    சென்னை பள்ளிகள் அளவில், முதலிடம் பெற்ற மாணவி புவனேஸ்வரி:

    கடந்த ஆண்டு, ’தினமலர் - ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றேன்ம

    ஆசிரியர்கள் குறிப்பிட்ட முக்கியமான வினாக்கள், தேர்வு எழுதும் முறை மற்றும் ஆலோசனைகளை குறிப்பெடுத்து, தினமும் படித்தேன் 

    தேர்வில், விடைகளை எப்படி எழுதுவது, முழுமையான மதிப்பெண் கிடைக்க தயாராவது எப்படி என, பள்ளி ஆசிரியர்களின் வழி காட்டுதல்களைப் பின்பற்றினேன்

    ஆசிரியர்களின் முழு நேர அர்ப்பணிப்புசென்னை பள்ளிகள் அளவில், இரண்டாமிடம் பெற்ற மல்வின் ரோஷன்:

    பள்ளியில் சிறப்பு பயிற்சி. மாணவியர் அனைவருக்கும் ஆசிரியர்கள், கூடுதல் நேரம் ஒதுக்கி, பாடக் குறிப்புகள், ஆலோசனைகள் வழங்கினர்மு   ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் பாடங்களை, வீட்டிற்கு சென்று, அன்றே படித்து முடித்தேன்.

    புத்தகங்களை ஜெயி; தேர்வில் வெல்!

    மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும், ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், பங்கேற்பதில், எனக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. தேர்வுகளில் மாணவர்கள் நினைத்த மதிப்பெண்ணை பெறுவதோ, ஜெயிப்பதோ, பெரிய விஷயம் அல்ல. ஆனால், அதற்காக மாணவர்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும். 

    பாட புத்தகங்களை திறந்து வைப்பது, பின், மூடி விடுவது என, உனது படிப்பை குறைத்தால், ஜெயிப்பது கடினம். அந்த புத்தகத்துடன் மாணவர்கள் பேச வேண்டும். ’உன்னிடம் உள்ள பாடங்களை படித்து முடிக்கிறேன்’ என, சவால் விட்டு படித்தால், புத்தகத்தை படிப்பதிலும், தேர்விலும் வெற்றி பெறலாம். 

    எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு சாதனை படைத்தவரிடம், ’எப்படி இந்த சிகரத்தை தொட முடிந்தது’ என, கேட்டனர். அதற்கு அவர், ’நான் இந்த பனிக்கட்டிகளை வென்று, சிகரத்தை தொட்டு விடுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், என் மனம் தான், நீ தொட்டு விடுவாயா என சவால் விட்டது. 

    அதையும் ஜெயித்து, தொட்டு விட்டேன்’ என்றார். கற்பகத்தருவின் கீழ் நின்று, ஒருவன் எதை நினைக்கிறானோ, அது கிடைக்கும். ஒருவன் தனக்கு நல்ல உணவு வேண்டு மென்று நினைத்தான்; கிடைத்தது. நல்ல துாக்கத்திற்கு சொகுசான படுக்கை வேண்டுமென நினைத்தான்; கிடைத்தது. நினைத்த எல்லாமே கிடைத்தது. 

    இறுதியில், தன்னை நாயும், நரியும் சாப்பிட்டு விடுமோ என, நினைத்தான்; அதேபோல், சாப்பிட்டு விட்டன.எனவே, நீ எதை நினைக்கிறாயோ, அதையே மனம் செய்யும். மனதால் எப்போதும் துவண்டு விடாதீர். மனம் உன் லட்சியத்தை சிதைக்க நினைக்கும். மனதை திடமாக்கு; வெற்றி கிடைக்கும்.

    பேராசிரியை பர்வீன் சுல்தானாவின் தன்னம்பிக்கை சார்ந்த கதை, ’எப்போதும் நல்லதையே நினைத்தால், நல்லதே நடக்கும்’ என்பதை பதிய வைத்தது. எதிர்மறை சிந்தனையை வளர விடக்கூடாது என்பதை, இங்கு உணர்ந்தேன். பாரதி, சென்னை மேல்நிலைப்பள்ளி, புத்தா தெரு, கொருக்குப்பேட்டை

    எங்கள் மாணவர்களின் பெற்றோரில், பலர் கல்வியறிவு பெறாதவர்கள். அவர்களால், தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி ஆலோசனைகள் வழங்க முடியாது. இந்த நிகழ்ச்சி மட்டுமே, வழிகாட்டி நிகழ்ச்சி என்பதால், இங்கு தரப்பட்ட ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ரெஜினா, சென்னை மேல்நிலைப்பள்ளி, எம்.எம்.டி.ஏ.,

    பெற்றோரின் தியாகம், கஷ்டத்தை உணர்ந்து படியுங்கள்; தன்னம்பிக்கையுடன் மூன்று மாதங்கள் கஷ்டப்பட்டு படித்தால், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம் என்ற, மனநல ஆலோசகர், கீர்த்தன்யா வழங்கிய அறிவுரைகள், பயனுள்ளதாக இருந்தன. எஸ்.அப்புசக்தி சென்னை மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி

    பலத்தை அறி; தோல்வியை தோற்கடி!

    மாணவ பருவம் மிக சந்தோஷமானது. தாங்கள் செய்யும் தவறுகளையும், பெற்றோரின் தியாகங்களையும், இந்த பருவம் உணர மறுக்கும். உங்களுக்காகவே உழைத்து, உருக்குலைந்து போன, பெற்றோரை, கண்களை மூடி, ஒரு முறை நினைத்து பாருங்கள். தமக்கு இல்லாவிட்டாலும், தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக, நல்ல உணவு, உடையை, கல்வியை தர கஷ்டப்படுகின்றனர். 

    நண்பர்களுடன் இருக்கும் சில மணித்துளிகளுக்காக, பெற்றோரை கஷ்டப்படுத்தியும், அவர்களின் மனதை காயப்படுத்தியும், நீ வளர்வதை புரிந்து கொள். தவறை, இனிமேலாவது உணர்ந்து, திருத்திக் கொள். ஒரு வேளை, பெற்றோர் உனக்கு வேண்டியதை தராவிட்டாலும், அதைப்பற்றி கவலைப்படாதே. 

    ’எதிர்காலத்தில் அவர்களுக்கு வேண்டியதை, நாம் செய்வோம்’ என நினைத்து, உன் எதிர்காலத்தை அமைத்துக் கொள். நேரத்தை வீணாக்காமல் படிக்க வேண்டும். நம்மால் மட்டுமே எதையும் செய்ய முடியும் என, நம்பிக்கை கொள்ளுங்கள். எதிர்கால வெற்றியை நினைத்தால், அதற்காக கடினமாக உழைக்கலாம். 

    மொத்தத்தில், தன்னை உணர்பவன், தோல்வியை தோற்கடித்து, வெற்றியை பெறுகிறான். நீங்களும், உங்களின் பலத்தை அறிந்தால், தோல்விகளை தோற்கடித்து விடலாம்.

    No comments: