தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும், 'வாட்ஸ் ஆப்'பை, பழைய மென்பொருட்களில் இயங்கும் மொபைல் போன்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 'வாட்ஸ் ஆப்' அறிமுகமாகி, ஏழு ஆண்டுகளுக்குள், உலகெங்கும், 100 கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். இது, புதிய தொழில்நுட்பத்துக்கு மாற உள்ளது. இதனால், பழைய மென்பொருட்களில் இயங்கும் மொபைல் போன்களில், இனி, வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது.
முதல்கட்டமாக, பழைய விண்டோஸ், ஆண்ட்ராய், ஆப்பிள் மென்பொருட்களில் செயல்படும் போன்களில், வாட்ஸ் ஆப்பை இந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அடுத்த ஆண்டு, ஜூன் வரை, பிளாக்பெரி, நோக்கியா ஏ - 40, நோக்கியா சிம்பியான் எஸ் - 60 மென்பொருள் உடைய போன்களில், வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும். தொடர்ந்து, வாட்ஸ் ஆப் பயன்படுத்த வேண்டுமானால், மொபைல் போனை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை.
No comments:
Post a Comment