மத்திய அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். பொதுச்செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன் சங்க நடவடிக்கை குறித்து விளக்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன், போராட்டம் தொடரும் நிலையில், அவர்களுக்காக ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment