தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை 83.33 லட்சம். இத்தகவல் தமிழக அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்திருக்கும் 83.33 லட்சம் பேரில் 42.72 லட்சம் பேர் பெண்கள். 4.71 லட்சம் பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். 6.47 லட்சம் பேர் ஆசிரியர்கள். 4.49 லட்சம் பேர் கலை பிரிவினர். 6.07 லட்சம் பேர் அறிவியல் பட்டதாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் 2.66 லட்சம் பேர் ஆவர். பட்ட மேற்படிப்பு முடித்த இன்ஜினியர்கள் 2.31 லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment