பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி இம்மாதம் 22இல் சென்னையில் பேரணி நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் அமைப்பின் மாநில பொருளாளர் திரிபுரசெல்வம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் தமிழ்ச்செல்வி, பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர்கள் தங்கராஜ், ஜேசுராஜ், துணைச் செயலர்கள் செந்தில்குமார், கண்ணன், கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள் கோலப்பன், ராஜ்குமார், ரஹ்மத், கண்காணிப்புக் குழுத் தலைவர்கள் மகேஸ்வரி, முத்துமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 22இல் சென்னையில் பேரணி நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment