பட்டசபை நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் இருந்து, மொத்தம், ௪௩ மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில், 19 பேர் ஆளும்கட்சியாகவும், 24 பேர் எதிர்க்கட்சிகளாகவும் பொறுப்பேற்றனர்.
சபாநாயகர், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் போன்ற பதவிகளுக்கு உரியோரை, மாணவர்களே தங்களுக்குள் விவாதித்து தேர்ந்தெடுத்தனர். எதிர்க்கட்சி வரிசையில், மொத்தம் மூன்று கட்சிகளும், ஆளும்கட்சி வரிசையில் ஒரு கட்சியும் இடம்
பெற்றன.காலை, 10:10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய பட்டசபையில், கவர்னர் தலைமையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். பின், கல்வி தொடர்பான பிரச்னைகள் குறித்து, காரசாரமாக விவாதித்தனர். அவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்த்து, எதிர்க்கட்சிகளில் ஒரு தரப்பினர் வெளிநடப்பு செய்தனர்.பட்டசபையில், சபாநாயகரின் ஒப்புதலோடு, எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் முன்வைத்த ஆலோசனைகளில் சில:இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மேம்படுத்த வேண்டும்தமிழகத்தில், 8ம் வகுப்பு வரை, 'அனைவருக்கும் தேர்ச்சி' அளிக்கப்படுகிறது. இதனால், கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது பல பள்ளிகளில், 9ம் வகுப்புகளில், 10ம் வகுப்பு பாடம், பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 வகுப்பு பாடம் நடத்தப்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட வகுப்பு பாடங்கள் புறக்கணிக்கப்படுவதோடு, புரிந்து படிக்கும் சூழல் தடைபட்டு,மனப்பாடம் செய்வது மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. அதனால், 9ம் வகுப்பில் இருந்து,
பிளஸ் 2 வகுப்பு வரை பொதுத்தேர்வு நடத்தி, மதிப் பெண் கூட்டுத்தொகையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
தேர்வில், புரிந்து எழுதுதல், மனப்பாடம் செய்து எழுதுதல் ஆகியவற்றிற்கு சம பங்கு
வழங்கப்பட வேண்டும்
தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்
தாய்மொழியில் பயின்று, முதல் இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பற்றிய அறிவிப்பை அரசு தான் செய்ய வேண்டும்
அரசின் மொழிக்கொள்கை சரியில்லாதால், ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் மாணவர்கள்
மேம்படுவதில்லை
அரசுப்பள்ளிகள் உயர, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிள்ளைகளை அங்கு சேர்க்க வேண்டும். அப்போது தான் தொடர்ச்சியாக கண்காணிக்கப்
பட்டு, அப்பள்ளிகள் வளரும்
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, ஆசிரியர்களுக்கு பயிலரங்கங்கள் நடத்தி, அவர்களின் கற்பிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும். வகுப்பறைகளை, கேள்விகள் எழுப்பி விவாதிக்கும் ஆரோக்கியமான அரங்கமாக மாற்ற வேண்டும்
மாணவர்கள் அதிக நேரம் செலவழிக்கும் பள்ளிகளில், குடிநீர், கழிப்பறைகள் சரியாக
இருப்பதில்லை. அதை, கோடைவிடுமுறையில் அரசு கண்காணித்து சரிசெய்ய வேண்டும்
பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால், மாதவிலக்கு நேரத்தில் மற்றவர்கள் முன்னிலையில் கூனிக் குறுகி நின்ற மாணவி ஒருத்தி, அவமானத்தால் தற்கொலைக்கு முயன்றாள். இந்த நிலை மாற, கழிப்பறைகளில் இலவச நாப்கின்களும், அவற்றை எரிக்கும் இயந்திரங்களும் இருக்க வேண்டும்
பாடநேரத்தை குறைத்து, தொழில், விளையாட்டு, கலை திறமைகளை வளர்க்க பயிற்சி அளிக்க வேண்டும்
பெரும்பாலான மாணவர்களுக்கு, மருத்துவர், பொறியாளர் கனவு தான் உள்ளது. அதற்காகத்தான் ஓடுகின்றனர். இந்த நிலை மாற, 9ம் வகுப்பில், படிப்பின் வகைகள், வேலைவாய்ப்புகள் குறித்த வழிகாட்டி வகுப்புகளை நடத்த வேண்டும்
பல பள்ளிகளில், கீழ்நிலை வகுப்புகளிலேயே 'ஆடியோ - விஷூவல்' முறையில், பாடம் நடத்துகின்றனர். அதனால், புத்தக வாசிப்பு ஒழிந்து, கற்பனை திறன் குறைந்து விடும்.
இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட, பட்டசபையின் முதல்வரும், கல்வி அமைச்சரும் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பட்டசபை நிகழ்ச்சி நிறைவில், பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, 'பட்டம்' இதழ் சார்பில், சான்றிதழ் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடுகளான 'அன்றாட வாழ்வில் அறிவியல், காய்ச்ச மரம் வேரின் துடிப்பு, கண்ணாமூச்சி விளையாட்டு' ஆகிய மூன்று புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
உரிமைகளை கட்டமைக்கும் இடம்:சட்டசபை என்பது மேஜைகளை தட்டும் இடமோ, எதிர்க்கட்சிகளை திட்டும் இடமோ அல்ல. மாறாக, அது, உரிமைகளை கட்டமைக்கும் இடம். அங்கு,
ஆரோக்கியமாக விவாதங்கள் நடந்து சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கல்வி குறித்து,
அரசிடமும், அரசியல் கட்சிகளிடமும் மாணவர்கள் வைக்கும் கருத்துக்களை
இந்த, 'மாதிரி பட்டசபை' சுட்டிக்காட்டுகிறது. ஞாநி, ஆலோசகர், 'பட்டம்' இதழ்
வெளியானது திறமை:எங்கள் பள்ளியில், பாடம் மட்டுமின்றி பேச்சு, கலை, விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த நிகழ்ச்சியில், எங்கள் பள்ளியில் இருந்து நான்கு மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பட்டசபை, மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளது. எல்.சொக்கலிங்கம்தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்கவாசகர் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை
கிடைத்தது பாராட்டு:நான் பட்டசபை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தேன். முதலில், 'மைக்' வாங்கியதும் பதற்றமடைந்து, பேச வேண்டியதை மறந்துவிட்டேன். உடனே அழுதுவிட்டேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை தேற்றினர். நம்பிக்கையுடன் பேசினேன். 'தினமலர்' நாளிதழ் துணை ஆசிரியரின் பாராட்டும் கிடைத்தது. எம்.ஐஸ்வர்யாமாணவி, ௫ம் வகுப்பு, அரசுப்பள்ளி, மாடாம்பூண்டி, விழுப்புரம்
No comments:
Post a Comment