Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 6, 2016

    கல்லூரி பெயரை விட கவுன்சிலிங் குறியீடு முக்கியம்:'தினமலர்' உங்களால் முடியும் நிகழ்ச்சியில் தகவல்

    'இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கல்லுாரி பெயர்களை விட, கல்லுாரிகளின் குறியீட்டு எண்ணை தெரிந்து கொள்ள வேண்டும்,'' என, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார். அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்பது குறித்த, வழிகாட்டும் நிகழ்ச்சியான, 'தினமலர் உங்களால் முடியும்' நிகழ்ச்சி, நேற்று சென்னை பெரம்பூரில் நடந்தது. 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' சேர்மன் ஸ்ரீராம் மற்றும் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பங்கேற்று, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    \
    கெஜட் அந்தஸ்து:கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: இன்ஜி., கவுன்சிலிங்குக்கு செல்லும் முன், விண்ணப்பங்களை நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், அரசின் கெஜட் அந்தஸ்து பெற்ற அதிகாரிகளின் இணைப்பு சான்றிதழ்
    போன்றவற்றுடன், சாதி, வருமான, இருப்பிட சான்றிதழ்கள், முதல் தலைமுறை சான்றிதழ்
    ஆகியவற்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.அவற்றை பல நகல்கள் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அத்துடன் அசல் சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். கலை, அறிவியல் கல்லுாரிகளில், அசல் சான்றிதழ் மூலம் சேர்ந்திருந்தால், கவுன்சிலிங்குக்கு ஒரு வாரம் முன்னரே அந்தக் கல்லுாரிக்கு சென்று, கல்லுாரி முதல்வரிடம் சான்றிதழ் நகல் மற்றும், 'அட்டெஸ்டேஷன்' இணைப்பு கடிதம் வாங்கி வைத்திருப்பது முக்கியம்.

    இதுதவிர அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும், 5 சதவீத மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை பெற, ஆண்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய் மட்டும் பெற்றோருக்கு வருவாய் உள்ளோர், வருமான சான்றிதழும் பெற்று கொள்ள வேண்டும்.
    கவுன்சிலிங் கடிதம் வீட்டுக்கு வராவிட்டாலும், இணையதளம் மற்றும் அண்ணா பல்கலை,
    இ-மெயில் தகவல் மூலம் தெரிந்து கொண்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு இரண்டு மணி நேரம் முன் சென்று, அழைப்பு கடித நகல் அங்கேயே வாங்கிக் கொள்வது நல்லது.

    மூன்று வித விருப்பங்கள்:கல்லுாரியில் சேர்வதற்கான முதல் வைப்புத் தொகை, 5,000 ரூபாயை, அண்ணா பல்கலை வளாக வங்கி கவுன்டரில், கவுன்சிலிங்குக்கு முதல் நாள் கூட சென்று அதற்கான சலானை பெற்றுக் கொள்ளலாம். கவுன்சிலிங்கில் எந்த பாடப்பிரிவு, எந்த கல்லுாரியை தேர்வு செய்வது என, முதலிலேயே மூன்று வித விருப்பங்களை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

    'கட் -- ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப்படி மட்டுமே, இடம் ஒதுக்கீடு செய்யப்
    படும். எனவே, அவரவர் மதிப்பெண்ணுக்கான வாய்ப்பு வேறு யாருக்கும் செல்லாது.
    கல்லுாரிகளை தேர்வு செய்யும் போது, அந்த கல்லுாரியின் பெயரை மட்டும் தெரிந்திருக்காமல், கல்லுாரியின் கவுன்சிலிங் அடையாள குறியீடு எண் கண்டிப்பாக தெரிந்தால் தான், நினைத்த கல்லுாரியை தேர்வு செய்ய முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

    பிளஸ் 2 முடித்த பின், என் போன்ற மாணவ, மாணவியர் எதைப் படிப்பது, எங்கு படிப்பது என்ற குழப்பத்தில் தடுமாறுவது வழக்கம். இந்த நிலையில், 'தினமலர்' நடத்திய, 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, என் குழப்பத்தை போக்கியது. ஜே.பி., சார், நிறைய தகவல்களை தெரிவித்தார்.
    நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க முடிவு செய்து விட்டேன்.கி.அஷ்மிதா மாணவி, பெரம்பூர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நல்ல வாய்ப்பு. அதற்காக முதலில் தினமலருக்கு நன்றி. அடுத்து, எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தால், எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற கேள்விக்கு, ஜெயபிரகாஷ் காந்தி சாரின் புள்ளி விவரமான விளக்கங்கள் எனக்கு நல்ல தெளிவை கொடுத்துள்ளது. நான், பி.டெக்., ஐ.டி., படிக்க உள்ளேன்.

    சா.மோதிகா,மாணவி, பழைய வண்ணாரப்பேட்டை.

    பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த என் மகனை, எந்த துறையில் படிக்க வைக்கலாம் என்று, எங்கள் வீட்டில் உள்ளவர்கள் பல ஆலோசனைகளை வழங்கினர். ஆனால், எல்லாப் பெற்றோருக்கும் இருப்பது போல, எனக்கும் தீராத குழப்பம் இருந்தது. இங்கு வந்து, 'உங்களால் முடியும்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், தெளிவு கிடைத்து விட்டது. என் மகனுக்கு சரியான துறையை தேர்ந்தெடுத்து படிக்க வைப்பேன்.ந.கிரிஜா,பெற்றோர், மூலக்கடை.

    என் மகளின் 'கட்-ஆப்' மார்க் குறைவு :என்றாலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ளேன். ஆனாலும், எதிர்காலத்தை பயனுள்ளதாக அமைக்க, சரியான துறை அதற்கான படிப்பு குறித்த குழப்பத்தில் இருந்தேன். இந்த சூழலில் தினமலரின், 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி எனக்கும், என் மகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.ரமேஷ்பெற்றோர், மணலி.

    No comments: