'தினமலர்' செய்தி எதிரொலியாக, அண்ணா பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங் சந்தேகங்களை தீர்க்க, குறைதீர் குழுவில், 20 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் இவர்கள் குறைகளை கேட்டனர்.அண்ணா பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு மற்றும் விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. ஆனால், 'ஆன்லைன்' விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணம் தொடர்பான குழப்பங்களால் பெற்றோர் தவித்தனர்.
இது தொடர்பாக, அண்ணா பல்கலை ஏற்கனவே அறிவித்த, 044 - 2235 8041, 2235 8042, 2235 8043, 2235 8044 என்ற, குறை தீர் தொலைபேசி எண்களில் அழைத்தால், பதில் அளிக்க யாரும் இல்லை. எப்போது தொடர்பு கொண்டாலும், 'உபயோகத்தில் உள்ளது; பின்னர் அழைக்கவும்' என்ற ஒலி மட்டுமே கேட்டதாக, மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து நமது நாளிதழில், ஜூன், 4ல், விரிவான செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி, பல்கலை பதிவாளர் கணேசன் ஆகியோரிடம் உயர்கல்வி செயலர் அபூர்வா விசாரணை நடத்தி, உடனடியாக குறையை தீர்க்க உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முதல், குறை தீர் குழுவில், 20 பேர் நியமிக்கப்பட்டனர். காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, இந்த எண்களில் கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களுக்கு விடை அறிந்து கொள்ளலாம். மேலும், ஏற்கனவே அறிவித்த நான்கு எண்களுடன் கூடுதலாக, 16 குறை தீர் தொலைபேசி எண்களையும் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அதன்படி, 044 - 2235 8041 முதல் 44 வரை, 044 - 2235 8301 முதல் 8310 வரை, 044 - 2235 8265 முதல் 8268 வரை, 044 - 2235 8411 முதல் 8413 ஆகிய எண்களிலும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
விண்ணப்ப நிலைஅறிய புது வசதி:அண்ணா பல்கலைக்கு அனுப்பிய விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதா எனப் பார்க்க, இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம், 4ம் தேதி முடிந்தது. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தபாலிலும், நேரிலும், அண்ணா பல்கலையில் ஒப்படைத்தனர்.
பல்கலையில் ஒப்படைத்த விண்ணப்பங்கள், மாணவர் சேர்க்கை பிரிவில் சேர்க்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள, இணையதளத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்
பட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலையின் https://www.annauniv.edu/tnea2016/ இணையதளத்தில், 'அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ்' என்ற பகுதியில், விண்ணப்ப எண்ணை செலுத்தி,விண்ணப்ப நிலையை அறியலாம்.
No comments:
Post a Comment