தமிழ்நாடு மின் வாரியத்தில் புதிய ஊழியர்களை தேர்வு செய்ய, தனி இணைய தள சேவை துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர், தணிக்கையாளர் உட்பட, 2,175 பணியியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இதற்கு, அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும், எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனி இணையதள முகவரி துவங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, பட்டதாரிகள், www.tangedco.directrecruitment.in என்ற இணைய தள முகவரில், மார்ச், 21 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க முடியாத பட்டதாரிகள், 73395 58405, 73395 58406, 73395 58408 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment