Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 29, 2016

    15169 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்காக ஆண்டுக்கு 1000 கோடி அரசு செலவிட கோரிக்கை!!!

    பகுதிநேர பயிற்றுநர் பணி  நியமனங்கள், இந்தியா முழுவதும் திட்டத்தின் அடிப்படையிலான பணியாக, மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்களிப்புடன்(65%:35%, 60%:40%, 50%:50%) அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு இவ்வேலையை ஓராண்டு சாதனை வேலையாக 2012ம் ஆண்டு அறிவித்து வழங்கியது. பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் School Education(C2) Department G.O.(MS) No.177 Dated:11.11.2011ன்படி 16549 பகுதி நேர பயிற்றுநர்களை தேர்வு செய்ய, முறைப்படி விளம்பரங்களை வேலைவாய்ப்பு அலுவலகம்  மூலமும், தினசரி நாளிதழ்கள் மூலமும் செய்தது.
    விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நேர்காணல் செய்து தகுதி மற்றும் வேலைவாய்ப்பக முன்னுரிமை, இனசுழற்சி அடிப்படையிலே நியமனங்களை மேற்கொண்டது. இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE) விதிமுறைகளுக்கேற்ப அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை நூறுக்கு அதிகமாக உள்ள 6 முதல் 8 வகுப்புகளுக்கு ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வியை போதித்திட  பகுதி நேர பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர். இவர்களில் 5253 நபர்கள் ஓவியம், 5392 நபர்கள்  உடற்கல்வி, 5904 நபர்கள் தையல், இசை, கணினி, தோட்டக்கலை, வாழ்வியல் திறன் கல்வி, கட்டிடம் கட்டும் கல்வி போன்ற தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஆவர். இவர்கள் வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் என மாதத்திற்கு பன்னிரண்டு அரைநாட்களாக பணிபுரிய உத்தரவிடப்பட்டது. மாதத்தொகுப்பூதியமாக ரூ.5000 கிராமக் கல்விக்குழுவால் வழங்கப்பட்டது. தற்போது அரசாணை 186 நாள் 18.11.2014ன்படி ஊதியம் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல் ரூ.7000மாக வழங்கப்பட்டு வருகிறது.
    தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் கடலூர் செந்தில் (எ) சி.செந்தில்குமார் கூறியதாவது.

    அரசாணையில் உள்ளபடி உத்தரவுகள் இதுவரை சரிவர கவனிக்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வருவதால்  பகுதிநேர பயிற்றுநர்கள் பெரும் சிக்கலில் தவித்து வருகின்றனர்.

    1.   G.O.177 ஆணைப்படி ஒரு பகுதிநேர பயிற்றுநர் அதிகபட்சமாக நான்கு பள்ளிகளில் பணிபுரிய இதுவரை வாய்ப்பளிக்கப்படவில்லை.

    2.   இரண்டாவதாக வெளியிடப்பட்ட G.O.186 ஆணைப்படி ஒரு பகுதிநேர பயிற்றுநர் அதிகபட்சமாக இரண்டு பள்ளிகளில்கூட இதுவரை  பணிபுரிய வாய்ப்பளிக்கப்படவில்லை.

    3.   G.O.186 ஆணைப்படி  ECS முறையில் மாதத்தின் முதல் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் அனைவருக்கும் வழங்கப்பட்டுவிட்டது என்று உறுதியாக சொல்லும்நிலை இல்லை. பள்ளிகளின் கிராமக் கல்விக்குழு வங்கிக் கணக்கை சோதனை செய்தாலே உண்மை தெரிந்துவிடும். கிராமக்கல்விக்குழு என்பது தலைமை ஆசிரியரும், ஊராட்சி/நகராட்சி மன்ற தலைவரும் உள்ளடக்கியது. இதனால் வெளியில் சொல்ல முடியாத சிக்கல்கள் நேர்கிறது. கால தாமதத்திற்கு இதுவே முழு முதற்காரணம் என்று சொல்கிறார்கள்.


    4.   G.O.186 ஆணைப்படி பணிநிரவல் RTE விதிமுறைகளின்படி நடைபெற்றாலும், பணிநிரவலால் தொலைதூரப் பள்ளிகளுக்கு மாறுதல் செய்யப்பட்டவர்கள் பள்ளிகளுக்கு சென்றுவர கூடுதல் நேர பயணத்தாலும்-பயணச்செலவாலும் ரூ.7000 தொகுப்பூதியத்தில்  நிதி சிக்கலில் தவிப்பதை களைய மறுவாய்ப்புகள் இதுவரை ஆய்வுக்குகூட எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் ஒரு சிலர்கள் தினமும் 300 கி.மீவரை பயணித்து பணி செய்கின்றனர். பணி நியமனமும் பெரும்பாலும் அருகாமையில் உள்ள பள்ளிகளிலே வழங்கப்படாமல் இருப்பதால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


    5.   அரசாணையில் மே மாதம் வேலையும் இல்லை-ஊதியமும் இல்லை என்று ஆணையிடப்படாதபோது சூழ்ச்சியாக இதுவரை மே-2012, மே-2013, மே-2014, மே-2015 ஊதியங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் அனைவரும் வஞ்சிக்கப்பட்டதாக நினைக்கின்றனர்.

    6.   காலஞ்சென்ற நாற்பதுக்கும் மேலான பகுதிநேர பயிற்றுநர்களின் குடும்பங்கள் அரசால் கண்டுகொள்ளப்படவில்லை. மேலும் வறுமையால் இவ்வேலையை வேண்டாம் என்று சென்றவர்களையும் அரசு அடையாளம் காணவில்லை. இருந்தும் இந்த நான்கு ஆண்டுகளாக பணியில் தொடரும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு தீபாவளி, பொங்கல் போனஸ் எதுவும் இதுவரை வழங்கப்படவேயில்லை என பகுதிநேர பயிற்றுநர்கள் குமுறுகின்றனர்.


    7.   16549 பகுதிநேர பயிற்றுநர்களில் தற்போது 15169 பகுதிநேர பயிற்றுநர்களே பணிபுரிந்துவருகின்றனர்.




    8.   பகுதிநேர வேலை என்ற பெயரில் மறைமுகமாக 13022 அரசுப் பள்ளிகளை எல்லா வகையிலும் முழு அளவில் பயன்படுத்தப்பட்டும், இதுவரை பகுதிநேர பயிற்றுநர்களை அடுத்த நிலைக்கு செல்ல பரிந்துரைக்கவில்லை. முழுநேர வேலை கொடுங்கள் என்று கோரியபோது மறுக்கும் அரசு, போராட்டத்தின்போது மட்டும் முழுநேரமாக பயன்படுத்துகிறது. ஜாக்டோ அமைப்பின் 8.10.2015 மற்றும் 1.2.2016 போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசின் உத்தரவின்படி முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளனர் என ஆதங்கத்துடன் பகுதிநேர பயிற்றுநர்கள் கூறிவருகின்றனர்.


    9.   முதல்வரின் நேரடி கவனத்தை ஈர்த்திட அனுப்பும் கோரிக்கை மனுக்களும் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டு வருவதால் ஆழ்ந்த கவலையில் செய்வதறியாமல் பகுதிநேர பயிற்றுநர்கள் பெரும் கவலையில் உள்ளனர். பகுதிநேர பயிற்றுநர்களின் கவலைகளை, குறைகளை, கோரிக்கைகளை யாரிடம் சொல்வது, யாரிடம் கேட்பது  என்று தவியாய் தவிக்கின்றனர். முதல்வரை சந்திக்க முடியாமல், ஐவர் குழுவினரை அடிக்கடி சந்தித்து கோரிக்கைகளை முறையிட்ட போதெல்லாம் நிச்சயம் அம்மா செய்வார் என்றே பதில்களை சொல்லி பகுதிநேர பயிற்றுநர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். கடைசி சட்டசபை கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு என்று கல்வி அமைச்சர் சொல்லி நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் என்று பகுதிநேர பயிற்றுநர்கள் புலம்பி வருகின்றனர்.


    10. பகுதிநேர பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறைகளால் பள்ளிகள் சரிவர இயக்கப்படாமல் இருந்தது. ஆசிரியர் விடுப்பு எடுக்கும்போதும் பள்ளிகள் சரிவர நடத்தப்படாமல் இருந்து வந்தது. அந்த சமயங்களில்  பொதுமக்களால் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களும், பள்ளிக்கு பூட்டுபோடும் சம்பவங்களும் நடத்தப்பட்டன. ஆனால் பகுதிநேர பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்ட பிறகு பள்ளி மூடப்படும் செய்திகளே இல்லை என அடித்து கூறுகின்றனர். நிதி நெருக்கடியால் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் தற்பொழுது மத்திய அரசின் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்ந்தெடுப்பதைப்போல 16549 பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தி அரசு வேலை அதுவும், ஆசிரியர் வேலை என்று ஏமாற வைத்து வாழ்வாதாரத்தை வீணாக்குவது நியாயந்தானா??. திட்டத்தின் அடிப்படையிலான வேலைகள் எந்ததெந்த துறைகளில் இதுவரை அரசால் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறது???. பிறகு ஏன் இதுபோன்ற வேலைகளை, ஓராண்டில் நூறாண்டு சாதனையாக அறிவிக்கனும்??. இதற்கெல்லாம் வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமை, எழுத்து தேர்வு, கல்வித் தகுதி போன்றவைகள் தேவைதானா??. திட்டத்தின் வேலை, தற்காலிக வேலை, ஒப்பந்த வேலை, அதுவும் பகுதிநேர வேலை என்று நியமனம் செய்துவிட்டு அதனால் அவதிப்படும் பிரச்சனைகளையும் கண்டுகொள்ளாமல் அரசு மவுனம் காப்பது சரிதானா??.  என கேள்வி எழுப்புகின்றனர்.


    11. கோடிக்கணக்கில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதை போல 13022 அரசுப் பள்ளிகளை மௌனமாக இயக்கிவரும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய ஆகும் செலவினை கணக்கிட்டு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினால் போதும். இதே பிரிவில் நிரந்தர சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வரும்போது ஒரே கல்வித்தகுதி இருந்தும் இதுபோன்ற அரசின் இரட்டை நிலைகளால், இரட்டை முடிவுகளால் ரூ.7000 தொகுப்பூதியத்தில் ஆண்டுக்கு 11 மாதம் மட்டுமே வேலையால் பகுதிநேர பயிற்றுநர்கள் நிலைகுலைந்து தவிக்கின்றனர். இந்த ஆட்சியில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுவரும் 70000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் இந்த 16549 பகுதிநேர பயிற்றுநர்களும் சேர்த்தே கணக்கிடுவதாக சொல்கின்றனர்.


    12. ஒவ்வொரு துறையிலும் தினக்கூலிகளாக பணி செய்தவர்கள், தொகுப்பூதிய பணி செய்தவர்கள், மதிப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டவர்கள் அனைவரும் அவ்வப்போது பரிந்துரை செய்யப்பட்டு அரசால் கால முறை ஊதியம் செய்து, பணி வரன்முறை செய்து, பணி நிரந்தரம் செய்யப்பட்டு வந்துள்ளனர். அதைப்போலவே பகுதிநேர பயிற்றுநர்களுக்கும் அனைவருக்கும் கல்வி இயக்கத்திலோ அல்லது பள்ளிக்கல்வித்துறையிலோ காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்தினால் பகுதிநேர பயிற்றுநர்களின் ஐந்தாண்டு பணிக்கு அங்கீகாரம் செய்ததாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    13. 2004ம் ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பிறகு காலமுறை ஊதியத்துடன் பணிநிரந்தரம் செய்யப்பட்டதை போல 2012ல் நியமனம் செய்யப்பட்ட பகுதிநேர பயிற்றுநர்களையும் பணிநிரந்தரம் வேண்டும் என கோரி வருகின்றனர்.

    14. மத்திய அரசின் திட்ட வேலையாக இருந்தாலும், மாநில அரசு பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கி அனைவரையும் பணி நிரந்தரம் செய்துதர வேண்டும். எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ரூபாய் 45000 கடனாக அரசால்  சுமத்தப்பட்டு இருக்கும்போது, ஏன் இந்த 15169 பகுதிநேர பயிற்றுநர்களுக்கும் வேலை நிரந்தரம் செய்யப்படுவதற்காக ஆண்டுக்கு 1000 கோடி செலவிடக்கூடாது என கேட்கின்றனர்.

    15. பணிநிரந்தரம் செய்யப்படாதவரை இன்றுள்ள பிரச்சனைகள் ஒருபோதும் ஒழியாது என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.


    16. இறந்து போனவர்களுக்கு அரசு உதவாதது அதிர்ச்சி அளிப்பதாக கூறுகின்றனர்.

    17. பணியில் சேர்ந்த பின்னர் வயது முதிர்வால் பணியை விட்டு சென்றவர்களுக்கும், இனி வருங்காலங்களில் வயது முதிர்வை அடைய உள்ளவர்களுக்கும், தனி அதிகாரி அல்லது கமிட்டி அமைத்து அனைவருக்கும் உரிய இழப்பீடை வழங்கவேண்டும் என கோரி வருகின்றனர்.

    18. பகுதிநேர கணினி பயிற்றுநர்களை பயன்படுத்தி கணினி பாடத்தையும், கணினி வேலைகளையும் செய்து வருவதால் நிரந்தர கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளதை கடுமையாக எதிர்க்கின்றனர்.

    19. நிதி நெருக்கடி ஒருபக்கம் இருந்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் பகுதிநேர பயிற்றுநர்களை பாடவாரியாக படிப்படியாககூட பணி நிரந்தம் செய்து இருக்கலாம். ஆனால் ஏமாற்றப்பட்டுவிட்டதாக நினைக்கின்றனர்.

    20. காலிப்பணியிடமாக இருந்ததாலே அல்லது தேவைப்பட்டதாலே இப்போது பணிபுரிந்துவரும் இந்த பகுதிநேர பயிற்றுநர் பணியானது வழங்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் அதனை முழுநேரப்பணியாக வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பினர். பணி தேவைப்படும்போது ஏன் இந்த பாரபட்சம் என வேதனை அடைகின்றனர்.

    21. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் 15169 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மட்டும் ஏழாயிரம் தொகுப்பூதியம் குடும்பம் நடத்திட போதுமா என கேள்வி எழுப்புகின்றனர்.

    22. பகுதிநேர பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்கு மட்டுமே ஒட்டுமொத்த ஆதரவை தெரிவிப்போம் என்று கூறி வருகின்றனர்.

    No comments: