பிளஸ் 2வுக்கு பின், உயர் கல்வியில், என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் போன்ற சந்தேகங்களுக்கு வழிகாட்டும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஏப்ரல் 2 முதல் 10 வரை பல மாவட்டங்களில் நடக்க உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தேர்வு முடிவுகள் வந்ததும் மாணவர்கள், இன்ஜி.,மருத்துவம் உட்பட, பலவகை படிப்புகளில், ஒன்றை தேர்வு செய்து படிப்பர். இதில், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பல குழப்பங்கள் இருக்கும்.
என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம்; எந்த கல்லூரி சிறந்தது; அவற்றின் தொழில்நுட்ப வசதிகள் என்ன என, பல சந்தேகங்களை தீர்க்க வேண்டும். மாணவர், பெற்றோர், ஒவ்வொரு கல்லூரி, பல்கலைக்கு நேரில் சென்று விசாரிக்க முடியாமல் அவதிப்படுவர். எனவே, உயர் கல்வி குறித்த சந்தேகங்களை தீர்க்க, வழிகாட்டி நிகழ்ச்சி தினமலர் நாளிதழ் மூலம், 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், துறைசார் நிபுணர்கள், கல்லூரி அதிபர்கள் பங்கேற்று, மாணவர் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பர். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைகள், ஒரே இடத்தில் தங்களின் கல்வி அனுபவங்கள், தங்கள் நிறுவனங்களில் உள்ள பாடங்களின் சிறப்புகள், தொழில்நுட்ப வசதிகள், உள்கட்டமைப்பு போன்ற பல அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
நிகழ்ச்சிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு, தினமலர் வழிகாட்டி புத்தகம் வழங்கப்படும். இந்த புத்தகத்தில் உயர் கல்வி குறித்த அனைத்து தகவல்களும், கல்வி நிறுவனங்களின் விவரங்களும் இடம் பெற்று இருக்கும்.
நிகழ்ச்சி தேதி விவரங்கள்:
ஏப்.,2 முதல் 4 வரை, சென்னை, மதுரை மற்றும் கோவை
ஏப்.,5 முதல் 7 வரை, புதுச்சேரி
ஏப்., 6 மற்றும் 7 திண்டுக்கல்
ஏப்., 9 மற்றும் 10 திருப்பூர்
இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். சரியான பதில் அளிப்பவர்களுக்கு டேப்லட்கள் மற்றும் வாட்சுகள் பரிசாக வழங்கப்படும்.
No comments:
Post a Comment