நெல்லை அரசு உதவிபெறும் பள்ளியில் ஓட்டுச்சாவடிக்காக சாய்வுதளம் அமைக்காததால்,பள்ளிக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் மாணவ, மாணவிகளுக்கு கிறிஸ்துவ ஆலயத்தில் வைத்து வகுப்புகள் நடத்தினர்.
திருநெல்வேலி, சாந்திநகரில், தென்னிந்திய திருச்சபையின் சி.எஸ்.ஐ.,துவக்கப்பள்ளி உள்ளது.அரசு உதவிப்பெறும் இப்பள்ளியில் வரும் சட்டசபை தேர்தலுக்காக ஓட்டுச்சாவடி அமைக்கும் பணி நடந்தது. அங்கு ஊனமுற்றோர் நடந்துசெல்லும் வகையில், சாய்வுதளம் அமைக்க உத்தரவிட்டிருந்தனர்.ஆனால் பள்ளி நிர்வாகம் சாய்வுத்தளம் அமைக்கவில்லை. இதனை கண்டித்த தேர்தல் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து, பள்ளி வகுப்புகளுக்கு பூட்டுப்போட்டுவிட்டு சென்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அதே வளாகத்தில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிற்பகலில் அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், சாய்வுத்தளத்தை விரைந்து அமைக்க உத்தரவிட்டனர். வகுப்பறைகள் திறக்கப்பட்டன.அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இருப்பினும் அங்கு மாணவ, மாணவிகளுக்கோ, ஆசிரியைகளுக்கோ கழிப்பறைகள்இல்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment