பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் சிந்திக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் நுாறு மதிப்பெண் எடுப்பது கடினம், என மாணவர்கள் தெரிவித்தனர். வினாத்தாள் குறித்து மதுரை மாணவர்கள் கூறியது:
டி.ஸ்வாதிகிருஷ்ணன், ரோஸ் மெட்ரிக் பள்ளி: வினாத்தாளை பார்த்தவுடன் படபடவென விடைகளை எழுத முடியவில்லை. நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. பொருத்துக வினா குழம்ப வைத்தது. ரோடு மேப், பாடல் பாரா நிரப்புதல், விளம்பர உருவாக்கம், மைன்ட் மேப் எளிதாக இருந்தது.
டி.ஸ்வேதா, ரயில்வே இருபாலர் மேல்நிலைப் பள்ளி:
எல்லா கேள்விகளும் புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டன. ஒருவரி, அடையாளப்படுத்துதல் வினாக்கள் சற்றே கடினமாக இருந்தது. கேரக்டர் பேசுதல் சிந்திக்க வைத்தது. ஸ்லோகன் உருவாக்குதலுக்கான அர்த்தம் புரியவில்லை.
எஸ்.ஸ்ரீ சாருமதி, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை:
கேரக்டர் பேசுதல் வினாவை சிந்திக்கும் படி கேட்டனர். சற்றே குழப்பமாகவும் இருந்தது. பராடக்ட், ஸ்லோகன் உருவாக்குதலில் 3, 5ம் வினாக்கள், பொருத்துகவில் 5ம் வினா குழப்பத்தை ஏற்படுத்தியது. மற்றபடி படம் விவரித்தல் எளிதாக இருந்தது. ரோடு மேப், பாடல், பாரா வினாக்கள் நன்றாக அமைந்தன.
பி.ஆனந்தலட்சுமி, ஆசிரியை, களிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மதுரை:
துணைப்பாடம் பகுதி 2 மற்றும் 4ம் வினாக்கள் தவிர ஆங்கிலம் இரண்டாம் தாள் எளிதாக இருந்தது. இரண்டாம் வினா ஷாம் என்ற கதையில் இருந்து கூறியவர் பேசியவர் பகுதியில் தாங்க்யூ ஷெல்லி என்பதற்கு பதில் தாங்க் யூ என மட்டும் கேட்கப்பட்டது. இந்த வினாவால் மாணவர்கள் திணறினர். 5 மதிப்பெண் நெடுவினா பகுதியில் முதல் மூன்று பாடத்திற்குள் இருந்து 2 வினாக்கள் கேட்கப்பட்டன. மொழித்திறன், உரையாடல் பகுதியும் எளிதாக இருந்தது.
கடிதம் எழுதும் பகுதியில் நண்பருக்கு கடிதம் பகுதி கேட்கப்பட்டது. தலைப்பு செய்தியை விரிவான செய்தியாக மாற்றுதல், படம் பார்த்து விடை எழுதுவது, ரோடு மேப், கற்பனையை எழுதுதல் பகுதிகளும் ஏற்கனவே எதிர்பார்த்த வினாக்களாக அமைந்தன. முழுமையான மதிப்பெண் பெறுவது கடினம் என்றாலும் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
No comments:
Post a Comment