'தமிழ்நாடு மின் வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாததால், கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியம், உதவியாளர் உட்பட, 2,175 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு, விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். ஒரே நேரத்தில், பலரும் விண்ணப்பித்ததால், இணையதளத்தின் வேகம் குறைந்தது.
இதனால், பலரால், தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்கும்படி, மின் வாரியத்திற்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து, பட்டதாரிகள் கூறியதாவது:மின் வாரியத்தில், மூன்று அல்லது, ஐந்து ஆண்டுகளுக்கு, ஒரு முறை தான், ஊழியர் தேர்வு நடக்கிறது. 'மார்ச், 7 முதல், தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்' என, தெரிவித்தனர். ஆனால், எந்த இணையதளம் என, அறிவிக்கவில்லை; இதனால், பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை. மார்ச், 17ல் தான், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதள முகவரி, மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இரண்டு நாட்களாக, அந்த இணையதள சேவை மிக மோசமாக இருந்தது. எனவே, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment