பத்தாம் வகுப்பு ஆங்கில இரண்டாம் தாளில், விளம்பரம் தொடர்பான ஐந்து மதிப்பெண் கேள்விக்கு, கடந்தாண்டு வரை வெள்ளைத்தாள் தனியாக வழங்கப்பட்டது. நேற்று தேர்வு நடந்தபோது, தனித்தாள் வழங்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்பின் விடைத்தாளின் கோடிட்ட கடைசிபக்கத்தில் விடையெழுத அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியது: வெள்ளைத்தாள் தொடர்பாக பெரும்பாலான பள்ளிகளுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை. ஒருசில பள்ளிகளில் மேற்பார்வையாளர்கள் இல்லாததால், கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக மாணவர்கள் அந்த கேள்விக்கு பதில் அளித்தனர். எனவே அந்த கேள்வியை தேர்வு செய்த அனைவருக்கும், ஐந்து மதிப்பெண் வழங்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன் கூறியது: தேர்வின் போது, கலர் பென்சில் பயன்படுத்தக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் விளம்பர கேள்விக்கு மாணவர்கள் கலர் பென்சில் பயன்படுத்தி பழகியதால் தேர்வின் போதும் அதை பின்பற்றியுள்ளனர். கலர் பென்சில் பயன்படுத்தியிருந்தாலும் முழுமதிப்பெண் வழங்கவேண்டும். இதுகுறித்து கல்வி அதிகாரி கூறும் போது, வெள்ளைத்தாள் குறித்து தலைமையாசிரியர்கள் மூலம், மாணவர்களிடம் தெரிவிக்க மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment